Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மூக்குத்தி அம்மன் 2! வெற்றியை எதிர்பார்க்கும் மூன்று தலைகள்

மூக்குத்தி அம்மன் 2! வெற்றியை எதிர்பார்க்கும் மூன்று தலைகள்

‘மூக்குத்தி அம்மன் பாகம் 2’ படத்தின் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் மூன்று முக்கிய நபர்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்: தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதற்பாகம் தந்த […]

‘மூக்குத்தி அம்மன் பாகம் 2’ படத்தின் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் மூன்று முக்கிய நபர்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்:

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதற்பாகம் தந்த வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்பொழுது இந்த படம் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்தைத் தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அதிபர் ஐசரி K. கணேஷ், சமீபகாலமாகத் தனது நிறுவனம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததால் பெரும் நிதி நெருக்கடியையும் சவால்களையும் சந்தித்து வருகிறார். மேலும், அவரது நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ள நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ தோல்வியடைந்தால் முதலீட்டாளர்கள் மற்றும் திரைத்துறையினரின் கடும் விமர்சனங்களுக்கு அவர் ஆளாக நேரிடும்.

சமீபகாலமாக நடிகை நயன்தாரா நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதால், அவரது கடைசியான வெற்றிப்படம் எது என்று யோசிக்கும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தன. தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரைத் தேடிச் செல்வது குறைந்த நிலையில், இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் மட்டுமே தமிழ் சினிமாவில் தனது இழந்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’ இடத்தையும் மீண்டும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் நயன்தாரா இருக்கிறார்.

அதேவேளையில், சுந்தர் சி-க்கும் இது மிக முக்கியமான ஒரு படமாகும். கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்து, சுந்தர் சி இயக்கவிருந்த பிரம்மாண்டமான படம் திடீரெனக் கைவிடப்பட்டதால், சுந்தர் சி கடுமையான விமர்சனங்களுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளானார். சுந்தர் சி தனது படங்களில் எப்போதும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வெற்றி கொடுப்பவர் என்பதால், அந்த ரஜினி படம் கைவிடப்பட்ட காரணம் ரசிகர்களுக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

ரஜினிகாந்தின் படத்தை இயக்க முடியாமல் தவறவிட்ட ஏமாற்றத்தையும், அது தொடர்பாக எழுந்த விமர்சனங்களையும் முறியடிக்க சுந்தர் சி-க்கு ஒரு மாபெரும் வெற்றித் தேவைப்படுகிறது. எனவே,’மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படத்தைப் பிரம்மாண்டமான வெற்றியாக மாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்லாமல்; தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி ஆகிய மூவரின் சினிமா எதிர்காலத்திற்கும் சவாலாகவும் மாறியுள்ளது

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.