
ஆரம்பத்தில் இருந்தே மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகம் பிரச்சனையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. முதலில் ஆர்ஜே பாலாஜி இதற்கு ஒரு பெரிய சம்பளத்தை கேட்டு பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளி வைத்தார். இதனால் இந்த படத்தை இயக்கும் பொறுப்பு சுந்தர் சி இடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடத்துவதற்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடங்களில் லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். அங்கே உள்ள கோயில்களில் இதன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி. ஆனால் நயன்தாரா அதற்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்து வருகிறார்.
பொள்ளாச்சி சூட்டிங் வேண்டாம் சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் இத்தன மணிக்கு மேல் சூட்டிங் வேண்டாம் என்றும் பல நிபந்தனைகளை போட்டு வருகிறார். இப்பொழுது இதற்கு மேலும் பின்னடைவாக நடிகை ஊர்வசியால் தடை ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஆர்.ஜே பாலாஜியின் அம்மாவாக நடித்தவர் ஊர்வசி.
மூட்டு வலி பிரச்சனை காரணமாக ஊர்வசியால் இந்த படத்திற்கு நெடு தொலைவு வர முடியவில்லை. அதனால் அவர் கால் சீட்டும் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் செய்பவர் துனியா விஜய். அவருக்கும் பிசியான செட்யூல் காரணமாக கோயம்புத்தூர் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒரு படத்திற்கு இவ்வளவு பிரச்சனைகளா என சுந்தர் சி இப்பொழுது மிகுந்த யோசனையில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய படம் கேங்கர்ஸ். இந்த படமும் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதனால் இதன் பிரமோஷன் வேலைகளை முதலில் முடித்து விடலாம் என மொத்த ஷூட்டிங்கையும் ஒத்திவைத்துள்ளார்.