புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மூர்த்தியின் மண்டையை பொளந்த சைக்கோ.. அதிரடியான காட்சியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போது அதிரடி காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதாவது பிரசாந்த் மறைத்து வைத்திருந்த டாக்குமெண்ட் மற்றும் பணத்தை மல்லி ஜீவாவிடம் எடுத்து கொடுத்து விடுகிறார். மேலும் ஜீவா அதை பத்திரமாக எடுத்துச் சென்று பெயரை மாற்றும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

மற்றொருபுறம் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த பிரசாந்த் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பித்து விடுகிறார். உடனடியாக மதுரைக்குச் சென்று தான் வைத்திருந்த பணம் மற்றும் டாக்குமெண்டை எடுக்க முற்படுகிறார். ஆனால் அப்போது மல்லி அங்கே இருப்பதால் பிரசாந்த் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அதன் பிறகு பணத்தை காணவில்லை என்றவுடன் பிரசாந்த் மல்லியிடம் நச்சரித்த நிலையில் ஜீவாவிடம் தான் கொடுத்த விஷயத்தை சொல்லி விடுகிறார். அங்கு பிரசாந்தை தேடி போலீசார் வந்த நிலையில் உடனடியாகவே தப்பித்து விடுகிறார். பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு வீட்டு மருமகள்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

மேலும் எல்லோரையும் பிரசாந்த் மிரட்டி பணத்தையும், டாக்குமெண்டையும் கேட்கிறார். இவர்கள் மறுத்ததால் கயலின் கழுத்தில் கையை வைத்து கொலை செய்திடுவேன் உடனே ஜீவாவுக்கு போன் செய்து வர சொல்லுங்கள் என்று மிரட்டுகிறார். பதறிப்போன மீனா உடனடியாக ஜீவாவுக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்லி வரவழைக்கிறார்.

மேலும் கயலை பனையமாக வைத்து பணத்தை வாங்கிய பிறகு ஜீவா பிரசாந்தை பிடிக்க முயற்சி செய்கிறார். அருகில் இருந்த மூர்த்தியின் மண்டையை பொளந்து விட்டு சைக்கோ மாதிரி அங்கிருந்து தப்பித்து விடுகிறார் பிரசாந்த். தனம் மற்றும் ஜீவா இருவரும் மூர்த்தியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

ஏற்கனவே ஜனார்த்தனனை கொலை செய்த வழக்கில் சிக்கி இருக்கும் பிரசாந்த் இப்போது மூர்த்தியையும் அடித்து விட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து கண்டிப்பாக போலீசாரிடம் பிரசாந்த் சிக்க இருக்கிறார். அவருக்கு தக்க தண்டனை கொடுத்து ஜெயிலில் போட உள்ளனர். இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ இருக்கின்றனர்.

Trending News