Healthy Food: கொஞ்சம் கூட நேரமில்லாமல் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது சந்தோஷமாக இருப்பதற்கு தான் என்று சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல், தியேட்டர், மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்கி அனாவசியமாக செலவு செய்து இதுதான் சந்தோசம் என்று நாமளே நம் ஏமாற்றிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான சந்தோசம், நிம்மதியான வாழ்க்கை எது என்றால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுதான்.
ஆனால் அதற்காக நாம் கொஞ்சம் கூட செலவழிக்க மாட்டோம். அதுவும் ஆரோக்கியம் என்றும் தெரிந்தும் அதற்கு மெனக்கீடு எடுக்க மாட்டோம் என்பதுதான் தற்போது அனைவருடைய மனநிலையாக இருக்கிறது. அந்த வகையில் தினமும் கிடைக்கக்கூடிய அதுவும் ஆறு ரூபாயில் அதிக ஆரோக்கியம் தரக்கூடியது முட்டை.
குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம்
முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு முட்டை ஒரு சைவ உணவு என்று கண்டுபிடித்தது வரை இந்த ஒரு உணவு அனைவரும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அந்த வகை தினமும் நான்கு முட்டை சாப்பிட்டால் போதும் 10 நன்மைகளை நாம் பெற முடியும். அதை பற்றி ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்.
முட்டைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், பி வைட்டமின்கள், கோலின், கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட 13 அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் முட்டைகள் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. முட்டைகளை தினமும் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவற்றுள்
மூளை ஆரோக்கியம்: வைட்டமின் டி நரம்பு செல்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவுகிறது. மேலும் கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது.
இதய ஆரோக்கியம்: முட்டைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் ஒமேகா-3 களால் செறிவூட்டப்பட்டவை. ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து HDL அல்லது “நல்ல” கொழுப்பை அதிகரிக்கலாம்.
கண் ஆரோக்கியம்: முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் என்னும் சத்து இருப்பதால் பார்வையை பராமரிக்க ரொம்பவே உதவியாக இருக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்: முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி இடுப்பு ஆரோக்கியத்திற்கு வலுவை கொடுக்கிறது.
தோல் மற்றும் முடி: புரோட்டின் சருமத்தை புத்துயிர் பெறவும், இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது மேல்தோலை ஹைட்ரேட் செய்ய வைக்கிறது.
கல்லீரல் செயல்பாடு: முட்டை போன்ற கோலின் நிறைந்த உணவுகள் உகந்த கல்லீரல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
மேலும் தி அமெரிக்கன் ஹாட் அசோசியேஷன் கருத்துப்படி நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவைப்படுகிறது. அந்த அளவில் 62% வரை ஒரு முட்டை ஈடு கட்டுகிறது. நம் உடலுக்கு கெட்ட கொழுப்புகளால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் முட்டையில் நல்ல கொழுப்பு தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
ஆனால் ஒவ்வொருவரும் உடலவாக்குக்கு ஏற்ப இது மாறுபடும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும், இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளை சாப்பிடலாம். இதனால் தசைகள் நன்கு வலுவாக இருக்கும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பு சத்துகள் கிடைப்பதால் இதனை அவரவர் தேவைக்கேற்ப சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் முட்டையுடன் சத்தான காய்கறிகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எனவே முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால் மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.
ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புகள்
- ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி
- குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் இருக்கும் மெத்தனால்
- சர்க்கரை நோய்க்கு சங்கு ஊதும் கொய்யா இலை