செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேரவனில் அசிங்கப்படுத்திய விஜய், நயன்தாரா.. ஆணவத்தில் ஆட்டம் போடும் சினிமா பிரபலங்கள்

சினிமா முன்னொரு காலத்தில் எந்த வசதிகளும் இல்லாமல் மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கி சினிமாவும் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டது. பெரிய பெரிய கதாநாயகர்களும், இயக்குனர்களும் பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளார்கள். சினிமா உருவாவதற்கு பல பிரச்சினைகள் இருந்தபோதிலும் அதை சமாளித்து வெளிவந்துள்ளன.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை யாரும் எதிர்பார்க்காதது அதாவது பெரிய நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள் பயன்படுத்தப்படும் கேரவன் அது தற்போது இருக்கும் சூழலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கேமரா இல்லாமல் படம் பண்ணி விடலாம் போல இருக்கிறது ஆனால் இந்த கேரவன் இல்லாமல் படத்தை உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்று ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது.

கன்னட சின்னத்திரை நடிகர் அனிருத் தனக்கு கேரவன் தரவில்லை என்று கோபப்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே சென்றுவிட்டார். அவருக்கு தண்டனையாக இரண்டு வருடம் படப்பிடிப்பில் ஈடுபடக்கூடாது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கன்னட சின்னத்திரை அமைப்புகள் கூறியுள்ளன.

Also Read: எவ்வளவு அடி வாங்கினாலும் நான் ஹீரோதான்.. வயிற்றெரிச்சலை கிளப்பி வெறுப்பை சம்பாதிக்கும் சந்தானம்!

நடிகர் சந்தானம் காமெடியனாக வெற்றிபெற்றவர் தற்போது நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் செயல்படுகிறார். இதற்கும் காரணம் கேரவன் தான் இவர் நடிக்கும் காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு வழங்கப்படும் கேரவன் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படியே வழங்கினாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லாமல் வெகு தொலைவில் இருக்குமாறு செய்து விடுவார்கள். இதனை பொறுத்து பொறுத்து பார்த்த சந்தானம் இனிமேல் நானும் ஹீரோவாக மாறி விடுகிறேன் என்று மாறியதற்கான காரணத்தில் இதுவும் ஒன்று.

விஜய் போக்கிரி படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் கேரவன் உள்ளே இருப்பார். இவருக்கு பாதுகாவலாக வாசலில் ஒரு பையன் இருப்பான். அந்த படத்தில் நடித்த நெப்போலியன் தன் அமெரிக்க நண்பர்களுடன் விஜய்யை புகைப்படம் எடுக்க கேரவனுக்குள் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டார். உரிமையோடு விஜய்யை பார்க்க சென்ற நெப்போலியன் கேரவனுக்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்தப்பட்டார். இதை விஜய் செய்தார் என்று நெப்போலியன் கூறியிருக்கிறார்.

Also Read: சரவெடி இல்ல இது பிஜிலி பட்டாசு.. விஜய் தேவரகொண்டாவின் லைகர் விமர்சனம்

நயன்தாராவும் கேரவனில் இருக்கும்பொழுது இவருக்கு பரிச்சயமான இயக்குனர் ஒருவர் சந்திக்க வந்த பொழுது அவரை அனுமதிக்காமல் அவமானப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப் பட்டார். சில்க் ஸ்மிதா அன்றைய காலத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பில் இருக்கும்போது இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவித்து படத்தின் உள்ளவர்கள் நான்கு பக்கமும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தைரியமாகச் செல்லுங்கள் என்று சொன்னார்கள் அதனால் சென்றார்.

அப்போது தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்ந்த சில்க்ஸ்மிதா மேலே ஒரு தென்னை மரத்தில் ஒரு நபர் தன்னை பார்த்தது அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் தோன்றியது. அப்போது அந்த கேரவன் முக்கியமாக கருதப் பட்டது. அன்றைய காலகட்டத்தில் கேரவன் பயன்பாடு இருந்தாலும் அதனை பயன்படுத்தாமல் பல நடிகர்கள் படித்து வந்தனர் அதில் எடுத்துக்காட்டாக விஜயகாந்த், ரஜினி போன்றவர்கள் அதிகம் பயன்படுத்தாமல் இன்றுவரை இருந்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது கேரவன் என்பது அனைவருக்கும் கௌரவமாக மாறியுள்ளது. இதனை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நல்லது ஆனால் தற்போது அப்படி யாரும் பயன்படுத்தவில்லை இதனால் படப்பிடிப்புகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. முக்கியமாக இதனை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சட்டத்தையும் சினிமாத்துறையில் இயற்ற வேண்டும்.

Also Read: விஜய் திரிஷாவின் ரகசிய கேரவன் சேட்டைகள்.. அதிரடி காட்டிய சங்கீதா.. குருவி ரக்கையை ஒடித்த சம்பவம்

Trending News