பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் பிரச்சனையால் பல படங்கள் பின்வாங்கி உள்ளது. அதற்கு அடுத்த வாரம் காதலர் தினத்தன்றும் ரிலீசாக காத்திருந்த படங்கள் எல்லாமும் இப்பொழுது இரண்டு வாரங்கள் தள்ளி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அப்படி ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK): தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படம் இது. ஹியூமருக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறாராம் தனுஷ். படத்தை பார்த்த எஸ் ஜே சூர்யா தனுஷ் அடுத்த ஹிட் கொடுக்க தயாராகிவிட்டார் என பாராட்டியுள்ளார்.
டிராகன்: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் இது. ஏஜிஎஸ் தயாரிப்பில் அஸ்வந்த் மாரிமுத்து இதை இயக்கியுள்ளார். இந்த படமும் பிப்ரவரி 21 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
டூரிஸ்ட்ஃபேமிலி: இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.
ட்ரெயின்: ரெண்டு வருஷமா மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் ட்ரெயின். சஸ்பென்ஸ் திரில்லராக 21ஆம் தேதி இந்த படம் வரப்போகிறது ஆனால் மிஸ்கின் ப்ரோமோசனுக்கு வராமல் இருந்தாலே படம் ஹிட் ஆகிவிடும். வந்து ஏதாவது பேசிவிடக் கூடாது என தயாரிப்பாளர் S. தானு முழித்துக் கொண்டு இருக்கிறார்.