சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அதிகமான தேசிய விருது வாங்கிய 5 இசையமைப்பாளர்கள்.. இசைஞானியே மிஞ்சிய ஜாம்பவான்

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் எத்தனை முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

கேவி மகாதேவன் : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். இவர் 1942 ஆம் ஆண்டு மனோன்மணி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கேவி மகாதேவன் கந்தன் கருணை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

வித்யாசாகர் : வித்யாசாகர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் இசைமயமைத்துள்ளார். இவர் தில், ரன், தூள், கில்லி போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். வித்யாசாகர் தெலுங்கு படமான ஸ்வரபிஷேகம் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார்.

டி இமான் : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். விசில் படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் மற்றும் சின்னத்திரை பாடல்களுக்கு இமான் இசையமைத்துள்ளார். அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இமான் பெற்றார்.

இளையராஜா : தமிழ் சினிமாவில் அனைவராலும் நன்கு அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை இளையராஜா ஐந்து முறை பெற்றுள்ளார். தமிழில் சிந்து பைரவி, தாரைதப்பட்டை என இரண்டு படங்களுக்கும் தெலுங்கில் சாகர சங்கமம், ருத்ரவீணை படங்களுக்கும், மலையாளத்தில் பழசிராஜா படத்திற்கும் தேசிய விருதை வென்றுள்ளார்.

ஏஆர் ரகுமான் : மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். இவர் பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். ஏ ஆர் ரகுமான் தமிழில் ரோஜா, மின்சார கனவ, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை படங்களுக்காக தேசிய விருது பெற்றார். ஹிந்தியில் லாகன், மாம் படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

Trending News