ஒரே வருடத்தில் சகட்டுமேனிக்கு நடித்துத் தள்ளிய நடிப்பு அரக்கன்.. அதுக்குனு இவ்வளவு படங்களா.?

tamil-hero-25-movies
tamil-hero-25-movies

இப்போதெல்லாம் ஒரு நடிகரின் படங்கள் வருடத்திற்கு இரண்டு வருவதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. சில நடிகர்கள் படங்கள் 2, 3 வருடங்களுக்கு ஒரு முறை கூட வெளிவருகின்றன. இப்போது வருடங்களுக்கு 3,4 படங்கள் வெளியிடுவது என்றால் விஜய் சேதுபதி மட்டும் தான்.

ரஜினியும், விஜயும் வருடத்திற்கு ஒரு படம் என ரிலீஸ் செய்கிறார்கள், ஆனால் கமல் மற்றும் அஜித் படங்கள் வெளிவர அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் கூட ஆகும். இது அவர்கள் ரசிகர்களுக்கு இன்றளவும் ஏமாற்றமாகவே உள்ளது.

Also Read: சத்யராஜ் என்றாலே நினைவுக்கு வரும் 6 வசனங்கள்.. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்க!

ஆனால் 80 களின் இறுதியில் கோலிவுட் உச்ச நட்சத்திர நடிகர் ஒருவர் ஒரு ஆண்டில் மொத்தம் 25 தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இது மட்டுமல்லாது 3 பிராந்திய மொழி படங்கள் என அந்த ஆண்டு அவர் நடித்த படம் மொத்தம் 28.

மாதத்திற்கு ஒரு படம் என்றாலே வருடத்திற்கு 12 படங்கள் தான் வரும் ஆனால் இவர் 28 படங்களில் நடித்திருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் இவர் நடித்த இத்தனை படங்கள் ஆச்சர்யம் தான்.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தில் ‘விக்கி’ என்னும் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சத்யராஜ். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், சிறிய கேரக்டர்கள் என கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்காமல் பயன்படுத்தி, தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக மாறினார்.

Also Read: மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

சத்யராஜ் 1985 ஆம் ஆண்டு மட்டும் தமிழில் மொத்தம் 25 படங்களில் நடித்திருக்கிறார். சந்தோஷ கனவுகள், ஜெயின் ஜெயபால், காக்கிசட்டை, எரிமலை, ராமன் ஸ்ரீராமன் , நான் சிகப்பு மனிதன், நீதியின் நிழல், பிள்ளை நிலா,அன்பின் முகவரி, பகல் நிலவு, அண்ணி, காவல், ஆகாய தாமரைகள், கீதாஞ்சலி, வெளி, முதல் மரியாதை, ஈட்டி, ஸ்ரீ ராகவேந்திரா, மங்கம்மா சபதம், ஜப்பானில் கல்யாணராமன், மிஸ்டர் பரத், விக்ரம் போன்ற படங்கள் இந்த 25இல் அடங்கும்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் மிக தேர்ந்தவர் என்பதை அவருடைய இரண்டாவது இன்னிங்சிலும் நிரூபித்து வருகிறார். இவருடைய ‘கட்டப்பா ‘ கேரக்டர் இவருக்கு மிகப்பெரிய மைல்கல் . இப்போதும் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

Also Read: கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்

Advertisement Amazon Prime Banner