வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாண்டியனிடம் மகனுக்கு பொண்ணு பார்க்க சொல்லி கெஞ்சும் மாமியார்.. படிக்காமலேயே வேலையில் சேர்ந்த தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி காலேஜுக்கு கிளம்பி கொண்டு இருக்கிறார். ஆனால் இரவு முழுவதும் வேலைக்கு போயிட்டு வந்த கதிர் தூங்கிக் கொண்டிருப்பதால் எந்த சத்தமும் போட்டு தொந்தரவு பண்ணக்கூடாது என்று அமைதியாக ராஜி கிளம்புகிறார். இருந்தாலும் சின்ன சின்ன சத்தத்தை கேட்டு கதிர் எழுந்து விடுகிறார்.

பிறகு கதிர் நேரத்தை பார்த்ததும் காலேஜுக்கு டைம் ஆகிவிட்டது என்ற பதட்டத்தில் கிளம்ப ஆரம்பித்து விடுகிறார். அந்த நேரத்தில் ராஜி, கதிர்காக டிரஸ் அயன் பண்ணி அதை போட சொல்கிறார். ஆனால் கதிர், இந்த கலர் டிரஸ் எனக்கு பிடிக்கவே செய்யாது. அதனால் பிடிக்காத ட்ரெஸ்ஸை என்னால் போட முடியாது என்று ராஜியை வெறுப்பேத்தி விட்டார்.

இதனால் கடுப்பான ராஜி நான் உன் கூட சைக்கிளில் வர முடியாது நான் நடந்தே போகிறேன் என்று புலம்பிக்கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டார். பிறகு கதிர், ராஜி எடுத்து கொடுத்த டிரஸ்சை போட்டுட்டு பின்னாடியே சைக்கிளில் வருகிறார். வந்ததும் ராஜியை சமாதானப்படுத்தி விட்டு சைக்கிளில் காலேஜுக்கு கூட்டிட்டு போகிறார்.

இதனை தொடர்ந்து மீனா மற்றும் செந்தில் பேசிக்கொண்டே நடந்து ஆபிஸ்க்கு போகிறார்கள். போகும்பொழுது மாமாவிடமும் அத்தை இடமும் நீ என்ன பேசினாய் என்று மீனா செந்தில் இடம் கேட்கிறார். அப்பொழுது செந்தில், உண்மைதான் பேசினேன் ஏதாவது வாங்கணும்னு நினைச்சா கூட என் கையில் பணம் இல்லை.

அம்பது ரூபாய்க்கும் நூறு ரூபாய்க்கும் அப்பாவிடம் கேட்பது நல்லவா இருக்கும். அந்த ஒரு நிலைமை கதிருக்கு வேண்டாம் என்பது தான் சொன்னேன் என்று சொல்லிய நிலையில் மீனா, செந்திலை பீல் பண்ணி பார்க்க ஆரம்பித்து இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நீ அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டும்.

அதற்கு நீ நல்லா படி என்று அட்வைஸ் பண்ணி பேசிக்கொண்டே போகிறார்கள். அடுத்ததாக தங்கமயிலை கூட்டிட்டு சரவணன் பள்ளிக்கூடத்துக்கு வந்து விடுகிறார். அங்கே சர்டிபிகேட் இல்லாத விஷயத்தை ஏற்கனவே பாண்டியன் கூறியதால் தங்கமயிலிடம் சர்டிபிகேட் பற்றி எதுவும் கேட்காமல் வேலையில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆனால் படிப்பறிவு கொஞ்சம் கூட நம்மிடம் இல்லை எப்படி பாடம் எடுப்பது என்று தெரியாமல் பதட்டத்திலேயே தங்கமயில் இருக்கிறார். இதைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் தங்கமயிலின் உணர்வையும் புரிந்து கொள்ளாமல் நல்ல பாடம் எடு என்று வாழ்த்து சொல்லி சரவணன், பள்ளிக்கூடத்தில் இருந்து கிளம்பி விடுகிறார்.

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தங்கமயில் முழித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து கோமதி வாசலில் நின்று கொண்டிருக்கும் பொழுது கோமதி அம்மா வந்து கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பாண்டியனும் பழனிச்சாமியும் வந்த நிலையில் பாண்டியனிடம் எல்லாத்துக்கும் கல்யாணத்தை நல்லபடியாக பண்ணி வைத்தாய்.

அதே மாதிரி என் மகனுக்கும் ஒரு நல்ல பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைத்தால் நான் உயிரோடு இருப்பதற்குள் கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்த்து விடுவேன் என்று பழனிச்சாமிக்கு பொண்ணு பார்க்க சொல்லி பாண்டியனிடம் மாமியார் கெஞ்சுகிறார். உடனே பாண்டியனும் நான் பார்க்க ரெடி தான் ஆனால் உங்க மகன்கள் தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு மாமியார், அவங்க எந்த பிரச்சினையும் பண்ணாத அளவுக்கு நான் பார்த்துக் கொள்கிறேன். உன் பையனுக்கு எப்படி பொண்ணு பார்த்தியோ, அதே மாதிரி பழனிச்சாமியையும் உன் மகனாக நினைத்து நல்ல பொண்ணா பார்த்து கட்டி வை என்று கெஞ்சுகிறார். உடனே பாண்டியனும் சம்மதம் தெரிவித்த நிலையில் இனி கூடிய விரைவில் பழனிச்சாமியின் கல்யாண வைபோகம் நடக்கப் போகிறது.

Trending News