வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கோபியிடம் இருந்து பொண்டாட்டியை பிரித்த மாமியார்.. வயிற்றெரிச்சல் படும் ராதிகா

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் பாக்யா தனது பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற குழப்பத்தில் உள்ள நிலையில் மற்றொருபுறம் சுவாரசியமாக சில காட்சிகளும் சேர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது கோபியுடன் தானும் இருப்பேன் என்று ராதிகா இங்கு வந்து விட்டார். இது சுத்தமாக ஈஸ்வரிக்கு பிடிக்காத நிலையில் என்னென்ன குடைச்சல் கொடுக்க முடியுமோ அவை அனைத்துமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது ராதிகா மற்றும் கோபி இங்கு இருப்பதால் அவரது அப்பா, அம்மா இருவரும் ஹாலில் தான் உறங்குகிறார்கள்.

ஆனால் ஈஸ்வரிக்கு இது சுத்தமாக பிடிக்காத காரணத்தினால் கோபியுடன் படுக்க வேண்டும் என்ற ரூமுக்கு செல்கிறார். மேலும் அங்கு ஒரு கட்டில் இருப்பதால் அதில் கோபி மற்றும் ராதிகா உறங்குகின்றனர். ஈஸ்வரி தான் கீழே படுத்துக் கொள்வதாக சொல்கிறார். கோபி தன் அம்மா மீது உள்ள பாசத்தால் கட்டிலில் படுக்க சொல்கிறார்.

Also Read : வெறிகொண்ட பாம்பாக படை எடுத்து வரும் ஜீவானந்தம்.. தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட குணசேகரன்

மேலும் தான் கீழே படுக்கிறேன் என்று கோபி சொன்னவுடன் ஈஸ்வரி உனக்கே உடம்பு சரியில்ல நீ ஏன் இவ்வளவு சிரமப்படுற என்று வேதனைப்படுகிறார். இந்நிலையில் கோபி மற்றும் ஈஸ்வரியை கட்டிலில் படுக்க சொல்லிவிட்டு ராதிகா கீழே படுத்து விடுக்கிறார். இவ்வாறு கோபியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை ஈஸ்வரி பிரித்து வருகிறார்.

அதோடுமட்டுமல்லாமல் மறுநாள் கோபி வாக்கிங் செல்லும் போது பாக்யா அவரை சந்தித்து பேசுகிறார். அதாவது தன்னுடைய மகன்களின் வாழ்க்கை குறித்து பாக்யா சொல்லும்போது அங்கு ராதிகா வந்து விடுகிறார். இதை அடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து விடுவார்களோ என்ற பயம் ராதிகாவுக்கு வர தொடங்கி இருக்கிறது.

பழையபடி கோபியிடம் பாக்யா பேச வந்ததால் வயிற்றெரிச்சலில் ராதிகா இருக்கிறார். மேலும் ராதிகா மற்றும் ஈஸ்வரி இடையே ஆன வாக்குவாத காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் இவர்களது கூட்டணியில் நிறைய காட்சிகள் வர இருக்கிறது. ஆகையால் எலியும் பூனையுமாக இருவரும் மோதிக்கொள்ள இருக்கிறார்கள்.

Also Read : தீபாவளிக்கு டிஆர்பி-ஐ அடித்து நொறுக்க புது படங்களை இறக்கும் 4 சேனல்கள்.. எத பாக்குறது, எத விடுறதுன்னு தெரியல

Trending News