தற்போது திரையில் வெளிவந்துள்ள குட் நைட் படத்தை இயக்கியவர் விநாயக் சந்திரசேகரன். இது இவரின் நகைச்சுவை படமாக மக்களின் எதிர்பார்ப்பை கொண்டு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் தயாரிப்பாளரின் தரப்பில் இப்படம் கதிகலங்க செய்து வருவதாக செய்தி பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் ஐ டி ஊழியரான மோட்டார் மோகன் கதாபாத்திரத்தில் வரும் மணிகண்டனுக்கு குறட்டை தீராத பிரச்சனை இருப்பது போல காட்டப்பட்டிருக்கும்.
Also Read: Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்
மேலும் இதில் அவர் படும் இன்னலை வெளிகாட்டும் விதமாக கதை அமைந்திருக்கும். இதில் இவரின் நண்பரான திலக் உடன் இடம்பெறும் காமெடிகள் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். இவ்வாறு மக்களின் ஆதரவை பெற்றிருந்தும் வசூலில் வெற்றி பெறாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.
மேலும் படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 4 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இப்படத்தினை ஓ டி டி உரிமை ஆன ஹாட் ஸ்டார் நான்கு கோடிக்கு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை படம் வெளிவந்து சில நாட்களில் ஆகி உள்ள நிலையில் வசூலில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
Also Read: நடிப்பில் முத்திரை பதித்த மணிகண்டனின் 5 கதாபாத்திரங்கள்.. ராஜாக்கண்ணுவாக வாழ்ந்த கலைஞன்
மேலும் முதல் நாளில் 80 லட்சம் வசூலை பெற்றும் அதன்பின் படிப்படியாக 40 லட்சம் 30 லட்சம் என குறைந்து வருவது தயாரிப்பாளர் தரப்பில் மனவேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இதுவரை மொத்த வசூலாக பார்க்கையில் ஒன்றரை கோடி பெற்றுள்ள நிலையில் விளம்பரத்தை பொருத்து வசூல் அதிகமாகும் எனவும் நம்பப்படுகிறது.
படம் நன்றாக இருந்தும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தும் இவ்வாறு வசூலில் மோசமாக இருந்து வருவது படகுழுவினரை கவலை கொள்ளச் செய்கிறது. இருப்பினும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆகி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் அதிக வசூலை பெரும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்து வருகின்றது குட் நைட்.
Also Read: காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குட் நைட்.. இதோ ட்விட்டர் விமர்சனம்