மொட்டை ராஜேந்திரன் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் போராடி வருகிறார். பிதாமகன் படத்திற்கு முன்னதாக பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மொட்டை ராஜேந்திரன் குறளும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கர்ஜிக்கும். அதிலும் நான் கடவுள் படத்தில் இவருடைய எதிர்மறையான கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இப்படம் சரியாக போகவில்லை என்றாலும் இவரது திறமை பெரிய அளவில் பேசப்பட்டது .
ஆனால் சமீபகாலமாக மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி வருகிறார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவருடைய காமெடி வேற லெவலில் இருந்தது. இதனால் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறாராம்.
இவ்வாறு ஸ்டாண்ட், வில்லன் நடிகர், காமெடி என அனைத்திலும் கலக்கிய ஒரு நல்ல நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் இவர் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் மிகவும் வெகுளியாக மனிதராம். எல்லோரிடமும் அவ்வளவு அன்பாக பேசக்கூடியவர்.
மொட்டை ராஜேந்திரன் படவாய்ப்புகள் பறிபோக முக்கிய காரணம் அவர் சகட்டுமேனிக்கு எல்லா படங்களையும் ஒத்துக்கொண்டு நடித்து வந்தார். தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படியான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை.
இதனால் இவருக்கு இப்பொழுது வாய்ப்புகளே வரமாட்டேங்குதாம். ஒரு நல்ல திறமையான நடிகராக இருந்தாலும் தன்னை நிரூபிக்கும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தால் தற்போது அவரும் தமிழ் சினிமாவில் ஜொலித்து இருப்பார்.