செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அனுஷ்காவுக்கு பறிபோகும் பட வாய்ப்பு.. காரணத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள்

ஆரம்பத்தில் எல்லா ஹீரோயின்களை காட்டிலும் உயரமான நடிகை என்பதால் அனுஷ்காவுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்தது. விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அனுஷ்கா, சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து பாகுபலி படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே அனுஷ்கா நடித்த வந்தார். இதற்கு முன்னதாக ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா பலமடங்கு தனது உடல் எடையை கூட்டி இருந்தார்.

அதன்பிறகு பட வாய்ப்பு குறையத் தொடங்கியதால் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார். இந்நிலையில் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் பட விழாவில் கலந்து கொண்ட அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த அனுஷ்கா தற்போது உடல் பருமன் அதிகரித்துள்ளார். அதனால் தற்போது எந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க தயங்குகின்றனர்.

இதனால் எப்படியாவது மீண்டும் உடலை குறைத்த ஃபுல் ஃபார்மில் இறங்க வேண்டும் என்ற முயற்சியில் அனுஷ்கா ஈடுபட்டு வருகிறாராம். நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் பல வருடமாக சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து வர காரணம் அவர்களுடைய இளமையான தோற்றம் தான்.

தற்போது வரை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் உடல் எடையை கூட்டாமல் ஸ்லிம்மாக உள்ளனர். ஆனால் இவர்களை விட வயதில் குறைந்த அனுஷ்கா தனது உடல் கூடியதால் தற்போது பட வாய்ப்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அனுஷ்காவின் ரசிகர்கள் தற்போது கவலையில் உள்ளனர்.

Trending News