வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாண்டியன் ஹோட்டலுக்கு இப்படி எல்லாமா ஆப்பு வரும்.. கையில சூடு போட்டு சுளுக்கெடுத்த விட்ட முல்லை

விஜய் டிவியில் கூட்டுக் குடும்பத்தை கொண்டாடும் விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்போது இந்த குடும்பம் பிரிந்துள்ளது என்றாலும் அண்ணன் தம்பியின் பாசம் மாறவில்லை என்பதை உணர்த்தி வருகிறது.

இந்நிலையில் கதிரின் ஹோட்டலில் முதல் நாளே ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் முல்லையின் அக்கா மல்லிகா கதிரிடம் ஒரு மாதத்திற்குள் 50,000 லாபத்தை எடுக்க வேண்டும் என சவால் விட்டுள்ளார். இந்த சவாலை கதிரும் ஏற்று கடினமாக உழைத்து வருகிறார்.

Also Read : பாரதியால் குடிபோதையில் கற்பை இழந்த வெண்பா.. என்னடா இது மானங்கெட்ட சீரியல இருக்கு

இத்தனை நாளாக மல்லிகாவின் கதாபாத்திரத்தை காட்டாமல் இருந்த பாண்டியன் ஸ்டோர் தற்போது கதிரின் கடைக்கு ஆப்பு வைப்பதற்காக இந்த கதாபாத்திரத்தை மீண்டும் இத்தொடருக்கு கொண்டுவந்துள்ளது. தற்போது மல்லிகா ஒவ்வொரு விஷயத்திற்கும் அபசகுனமாக பேசி வருகிறார்.

இன்றாவது கடைக்கு லாபம் வருமா என்பது போல கிண்டலடித்து மல்லிகா பேசுகிறார். இதனால் எரிச்சலடைந்த முல்லை சூடு கரண்டியை மல்லிகாவின் கையில் வைத்து விடுகிறார். இப்பவாவது உனக்கு புத்தி வரட்டும், வாய மூடிக்கிட்டு இரு என்பது போல அவரது செய்கை இருந்தது.

Also Read : மீனாவை டம்மி ஆக்கிய கேடுகெட்ட வில்லி.. ஒரு மாதம் டேரா போடும் சக்களத்தி

மற்றொரு பக்கம் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் திறப்பதில் ஆர்வமாக உள்ளார். ஆனால் மீனா கண்ணனிடம் இப்பவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்கிறது இல்ல, இதுல அவ சம்பாதிச்சா அவ்வளவுதான் என்பதுபோல ஏத்திவிடுகிறார்.

மேலும் தனம், மூர்த்தியிடம் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் திறப்பதை பற்றி பேசுகிறார். அதற்கு மூர்த்தி பியூட்டி பார்லர் திறக்க சம்மதித்தாலும், வீட்டில் கடையை நடத்த அனுமதிக்கவில்லை. ஆனால் ஐஸ்வர்யா கண்டிப்பாக பியூட்டி பார்லர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Also Read : பாக்கியா உன்னால எவ்வளவு தான் நான் அசிங்கப்படுறது.. வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா!

Trending News