புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கும் முல்லை கதிர்.. நெகிழ்ச்சியான தருணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஆனந்தத்தில் நெகிழ வைக்கும் தருணமாக கதிர் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாக கணவன் மனைவிக்குள் வரக்கூடிய நிஜமான சந்தோசம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் தருணத்திலேயே அமையும்.

அதை தற்போது முல்லை கதிர் சந்தோசமாக அனுபவித்து வருகிறார்கள். குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார். இதைக் கேட்ட முல்லை வெட்கத்திலேயே சந்தோஷப்படுகிறார்.

Also read: ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

பிறகு குழந்தையை மூர்த்தி , தனம், மீனா அனைவரும் தூக்கி வைத்து கொஞ்சி சந்தோசமாக இருக்கிறார்கள். அடுத்ததாக முல்லை அம்மாவும் இதைவிட சந்தோசம் எனக்கு வேறு எதுவும் இல்லை என்ற மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் நல்ல விதமாக பழகுகிறார்.

அத்துடன் ஜீவா மூர்த்தி உடன் நெருங்கி வர இருக்கிறார். அப்படி பார்த்தால் கூடிய சீக்கிரத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழப் போகிறார்கள். இதற்கிடையில் இன்னும் ஐஸ்வர்யா கண்ணன் நிலைமை தான் என்ன ஆகப்போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

ஏனென்றால் கண்ணன் ஏற்கனவே வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த விஷயம் இன்னும் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. இதை சமாளிப்பதற்காக அவர் பேங்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயமும் வெளியே தெரிந்தால் கண்ணனுக்கு மட்டும் இல்லாமல் குடும்பத்துக்கும் அவமானம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இன்னும் இவருடைய பிரச்சனையையும் சமாளித்து விட்டு ஐஸ்வர்யா மற்றும் தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு அனைவரும் சந்தோஷமாக ஒரே குடும்பத்தில் இருந்து சுபம் என்று முடியும் தருணம் நெருங்கி விட்டது.

Also read: குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

Trending News