தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் நடித்த படங்களை எப்போதும் நம்மால் மறக்க முடியாத அளவிற்கு இருக்கும். அதிலும் 80, 90களில் வந்த படங்களும் சரி, அதில் நடித்தவர்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் தான் இதயம் முரளி. இவர் காதலுக்கு அடையாளமாய் பல படங்களில் நடித்திருந்தாலும் நமக்கு இன்றும் ஞாபகத்துக்கு வருவது சில படங்கள். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
பொற்காலம்: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு பொற்காலம் திரைப்படம் வெளிவந்தது. இதில் முரளி, மீனா, சங்கவி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் முரளி, மீனாவை காதலிப்பார். ஆனால் தங்கை ஊனமுற்ற பெண்ணாக இருப்பதால் யாரும் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து விடுவார்கள். இதனால் முரளியின் தங்கை விரக்தியில் தற்கொலை செய்து கொள்வார். இதை பார்த்து மனம் உடைந்து போன முரளி, தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த ஊனமுற்ற பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. என்பதற்காக நான் திருமணம் செய்து கொண்டால் ஒரு ஊனமுற்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முடிவெடுத்து இவரது காதலை தியாகம் செய்து விடுவார்.
Also read: இறந்து போன 5 ஹீரோக்களின் கடைசி படம்.. கடைசிவரை ஒருதலை காதலனாக சுற்றி திரிந்த இதயம் முரளி
வண்ணக் கனவுகள்: அமீர்ஜான் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வண்ணக் கனவுகள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கார்த்திக், முரளி, ஜெயஸ்ரீ, மற்றும் சார்லி ஆகியோர் நடித்தார்கள். இதில் மிகப்பெரிய சிறப்பு, இப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும். அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
என்றும் அன்புடன்: ஆர்.பாக்கியநாதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு என்றும் அன்புடன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளி, சித்தாரா,ஹீரா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் முரளி, ஹீரோவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். பிறகு அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் பிரிந்து விடுவார்கள். அதற்கு அடுத்து ஹீராவிற்கு ஒரு குழந்தை பிறக்கும் பின்பு ஹீராவும் இறந்து விடுகிறார். அதனால் அந்த குழந்தை அனாதை ஆசிரமத்தில், இருந்து சித்தாரா எடுத்து தன் குழந்தையாக பாவித்து வருவார். பின்பு முரளி அவர் குழந்தை இருக்கும் இடத்தை தேடி குழந்தையுடன் எப்படி சேர்கிறார் என்பதை படமாக எடுக்கப்பட்டிருக்கும்.
Also read: தம்பி கேரக்டர்னா முரளி தான் என்று நிரூபித்த 5 படங்கள்..பூமணியை பார்த்து எஸ் ஜே சூர்யா எடுத்த படம்
இதயம்: கதிர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு இதயம் திரைப்படம் வெளிவந்து. இதில் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்தி, ஜனகராஜ் மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் காதலை சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் நிலைமையை எடுத்து சொல்வது மட்டுமல்லாமல் காதலால் அவருக்கு மன அழுத்தமும் ஏற்பட்டு கிளைமேக்ஸ் காட்சியில் காதலியுடன் சேர முடியாமல் இருப்பதை படமாக எடுக்கப்பட்டிருக்கும்.
மணிக்குயில்: ராஜவர்மன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு மணிக்குயில் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளி, சாரதா பிரீத்தா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ஒரு அருமையான காதல், நகைச்சுவை மற்றும் குடும்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் வரும் அனைத்து பாடல்களையும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
ஊட்டி: அன்வர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஊட்டி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளி, ரோஜா, ராம்ஜி மற்றும் வையாபுரி ஆகியோர் நடித்தார்கள். இதில் முரளி தனது மாமாவின் கௌரவத்திற்காக அவரது மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் அவர் ஏற்கனவே வேறு ஒருவரை காதல் செய்து அவருடைய குழந்தையை வைத்திருப்பார். பின்பு ஒரு சூழலில் அவர் இறந்த உடனே அந்த குழந்தைக்கு முரளி அப்பாவாக இருப்பார். இவர் ஏற்கனவே ரோஜாவை காதலித்து சில காரணங்களால் பிரிந்து விடுவார்கள். மறுபடியும் இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும்.
Also read: குடும்ப நட்சத்திரமாக ஜொலித்த முரளியின் 5 படங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்