வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கடையை விட்டு துரத்திய மூர்த்தி.. ஜீவா எடுத்த விபரீத முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப ரசிகர்களை கவர்ந்த தொடர். கூட்டுக் குடும்பமாக இருந்த இத்தொடரில் கடைசி தம்பி காதல் திருமணம் செய்து கொண்டதால் சில காலம் இந்த குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் கண்ணா, அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளனர்.

ஆனால் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என பல சூழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஜீவா தற்போது தனது மாமனார் கடையை பார்த்து வருகிறார். அவருடைய மாமனார் முழு பொறுப்பையும் ஜீவாவிடம் கொடுக்கிறார். ஜீவாவிற்கு தனது மாமனார் கடையை பார்க்க துளியும் விருப்பமில்லை.

இதனால் அவ்வப்போது ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்தாலும் அண்ணன் மூர்த்தி ஜீவாவை எந்த வேலையும் செய்யவிடாமல் கொஞ்சம் கோபமாக நடந்து கொள்கிறார். ஏனென்றால் ஜீவாவிடம் கொஞ்சம் அக்கறையாக பேசினால் உடனே மாமனார் கடையை விட்டுவிட்டு இங்கே வந்து விடுவார் என்ற பயத்தால் மூர்த்தி இவ்வாறு நடந்து கொள்கிறார்.

ஆனால் தன் குடும்பமே தன்னை ஒதுக்கி வைப்பதாக நினைக்கும் ஜீவா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதனால் மீனாவின் அண்ணனுடன் சேர்ந்து ஜீவா குடிக்கிறார். அப்போது அங்கு வரும் தன்னுடைய மாமனாரிடம் ஜீவா தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்கிறார்.

மேலும், ஜீவா தன் வீட்டுக்கும் சென்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் நான் குடித்தற்கு காரணமே அண்ணன்தான், கடைக்கு போனா என்ன வரவே நான் சொல்றாரு, எனக்கு அந்தக் கடையில உரிமை இல்லையா என ஜீவா அழுகிறார். உடனே ஜீவாவை மீனா அழைத்து செல்கிறாள்.

இதனால் ஜீவாவின் நிலமைக்கு நான் தான் காரணம் என உணரும் மூர்த்தி மீண்டும் ஜீவாவிடம் அக்கறையாக பழக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை எப்படியாவது தடுத்து, முறியடிக்க மீனாவின் தந்தை செயல்படுவார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் பல திருப்பங்கள் வரக் காத்திருக்கிறது.

Trending News