ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உனக்கு போய் எழுதினேன் பாரு.. முருகதாஸை கண்டபடி திட்டிய பிரபலம்

இயக்குனர் முருகதாஸ் இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனாலும் கடந்த சில வருடங்களாக முருகதாஸ் இயக்கும் படங்கள் பெருமளவு ரசிகர்களை கவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வளவு ஏன் விஜய் நடிப்பில் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்க்கார் படம் வசூல் ரீதியாக சூப்பர் ஹிட் அடித்தாலும் படம் என்னமோ சுமார்தான்.

அதன் பிறகு மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி உருவாக இருந்த நிலையில் விஜய் முருகதாஸ் கதை சரியில்லை என அந்த படத்தின் வாய்ப்பை இளம் இயக்குனர் நெல்சன் பக்கம் தள்ளி விட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க ஆசை பட்ட முருகதாசுக்கு எதுவுமே கைகொடுக்கவில்லை.

இதற்கிடையில் ஹாலிவுட் அனிமேஷன் படம் ஒன்றை இயக்க இருந்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் தற்போது வரை தன்னுடைய படத்துக்கான அடுத்த ஹீரோ யார் என்பது தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறாராம். இந்நிலையில் முருகதாஸ் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

முருகதாஸ் தான் இயக்கிய முதல் படமான தீனா படத்தில் இடம்பெற்ற விபத்து குச்சி பத்திக்காதுடா என்ற பாடலை எழுதுவதற்காக கவிஞர் வாலியிடம் சென்றுள்ளார். வாலியிடம் பாடலுக்கான சந்தர்ப்பத்தை சொல்லிவிட்டு வந்து விட்டாராம்.

அதன்பிறகு பாடல் வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி. வத்திக்குச்சி பத்திக்காதுடா எனத் தொடங்கும் பாடலை காட்டியுள்ளார் கவிஞர் வாலி. ஆனால் சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்த முருகதாஸை பார்த்து இதற்குத்தான் புதுமுக இயக்குனர்களுக்கு பாடல் எழுதுவதே இல்லை எனக்கூறி சண்டையிட்டாராம்.

முருகதாஸின் ஏன் அப்படியே உட்கார்ந்திருந்தார் என்றால் அந்த பாடலில் அஜித் வாயில் வத்திக்குச்சி ஒத்து இருப்பார் என்பதை வாலியிடம் சொல்லவே இல்லையாம் முருகதாஸ். ஆனால் எப்படி அந்த லைனை பிடித்தார் என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Trending News