வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கஜினி. இந்த படத்தில் இவர்களிடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தர்பார் படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். அந்த சமயத்தில் நயன்தாராவுக்கு சம்பள பாக்கி இருந்ததால் கடைசி காட்சியில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

அப்புறம் எப்படியோ சமாதானம் செய்து நயன்தாரா அந்த காட்சியில் நடித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகிய நயன்தாரா இமேஜுக்கு களங்கம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் என்று நயன்தாரா உறுதியாக நம்பியதால் ஒரு பேட்டியில் இயக்குனர் பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக பேசி இருந்தார்.

Also Read : திருமணத்திற்கு பிறகு தத்தளிக்கும் நயன்தாராவின் மார்க்கெட்.. சோலியை முடித்துவிட்ட 2 படங்கள்

இந்நிலையில் முருகதாஸ் விஜயை வைத்து இயக்கிய கத்தி படத்தின் கதை ஒரு உதவி இயக்குனரின் கதையாம். அதை திருடி தான் முருகதாஸ் படத்தை எடுத்துள்ளார் என்று இணையத்தில் செய்தி வெளியானது. ஆனால் அப்போது முருகதாஸ் பெரிய இடத்தில் இருந்ததாலும், உதவி இயக்குனருக்கு கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் இது அப்படியே விடப்பட்டது.

அந்தச் சமயத்தில் உதவி இயக்குனரின் கஷ்டத்தை கேட்டு நயன்தாரா உங்கள் படத்தை நான் தயாரிக்கிறேன், உங்களுக்கு பிடித்த ஹீரோவை வைத்து படம் பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த இயக்குனர் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கி இருந்தார்.

Also Read : எம்மாடியோ, ஒரே நாளில் போட்ட மொத்த காச எடுத்த கோல்டு மூவி.. சொந்த ஊரில் கல்லா கட்டிய நயன்தாரா

அதாவது கோபி நைனார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான அறம் படம் தான் அது. இப்படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஏ ஆர் முருகதாஸால் ஏமாற்றப்பட்ட கோபி நயினார் நயன்தாராவால் இப்போது ஒரு நல்ல இயக்குனராக உருவாக்கப்பட்டுள்ளார்.

நயன்தாரா உதவியதற்கு அந்த இயக்குனருக்கு ஒரு வகையில் திறமை இருப்பது காரணமாக இருந்தாலும், தன்னுடைய எதிரியான முருகதாஸை பழிக்கு பழிவாங்க இவருக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அங்கீகரிக்கப்பட செய்துள்ளார். அந்த வாய்ப்பை கோபி நைனாரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Also Read : பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம், குழந்தைக்கு பின்னும் எட்ட முடியாத உயரத்தில் நயன்தாரா

Trending News