தமிழ் சினிமாவில் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி, காதல் என பல அம்சங்கள் கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இசையை மையமாக வைத்தும் படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளது. அவ்வாறு இசையை அடிப்படையாகக் கொண்டு வெற்றி கண்ட 10 படங்களை பார்க்கலாம்.
தில்லானா மோகனாம்பாள்: சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் 1968 இல் வெளியான திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இப்படத்தில் சிவாஜி நாதஸ்வர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரம் ஆக நடித்திருந்தார். இப்படம் இசையையும், நடனத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றி பெற்றது.
புது வசந்தம்: முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புது வசந்தம். இப்படத்தில் நான்கு நண்பர்களும் இசை மற்றும் நடனத்திலும் ஆர்வம் கொண்டுள்ளனர். இவர்களுக்கு சித்தாராவும் சேர்ந்து உதவி செய்கிறார். இசை மூலம் வாழ்வில் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
கரகாட்டக்காரன்: கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா கவுண்டமணி செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டகாரன். கரகாட்டக் கலைஞர்களின் கதையை நகைச்சுவையோடு சொன்ன படம் இது. இப்படத்தில் இடம்பெற்ற மாங்குயிலே பூங்குயிலே பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.
சிந்து பைரவி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுஹாசினி நடிப்பில் வெளியான திரைப்படம் சிந்து பைரவி. கர்நாடக இசை தொடர்பான படம் இது. இப்படத்தின் மூலம் சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார் சித்ரா. இப்படத்தில் இடம்பெற்ற நான் ஒரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன் போன்ற பல பாடல்கள் ஹிட்டானது.
கிழக்கு வாசல்: கார்த்திக், ரேவதி, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் கிழக்கு வாசல். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தெருக்கூத்து கலைஞராக பொன்னுரங்கம் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருந்தார். கார்த்திக் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் கிழக்கு வாசல். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
டூயட்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் டூயட். நட்புடன் இருக்கும் இரண்டு இசைக்கலைஞர்கள் ஒரு பெண் மீது ஆசைப்படும் கதைக்களமாக டூயட் படம் அமைந்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அஞ்சலி அஞ்சலி பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஜோடி: பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜோடி. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இசையால் இணையும் காதல் ஜோடி கடைசியில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே ஜோடி படத்தின் கதை. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
முகவரி: அஜித், ஜோதிகா நடிப்பில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் முகவரி. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா என்பதே முகவரி படத்தின் கதை. இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
பாய்ஸ்: ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இளைஞர்கள் இசையால் பட்ட கஷ்டமும் அதிலிருந்து மீண்டு வந்த இசையால் எப்படி முன்னேறினார்கள் என்பதாகும்.
மொழி: பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. இப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாமல் இருக்கும் ஜோதிகா இசையை உணர்வது போன்ற கதை அமைந்து இருக்கும். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது.