செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பல கோடியில் புரளும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு.. கைவசம் இத்தனை கார்களா?

Vijay Antony: விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். பெரும்பாலும் விஜய் ஆண்டனியின் படங்களில் குத்துப் பாடல்கள் ரசிகர்களை கும்மாளம் போட வைக்கும்.

இப்போது முழுவதுமாக படங்களில் ஹீரோவாக நடிப்பதில் தான் விஜய் ஆண்டனி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவருடைய நான் படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்த நிலையில் பிச்சைக்காரன் படம் வேறு தரத்திற்கு அவரைக் கொண்டு சென்றது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது.

Also Read : Kolai Movie Review- ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

பிச்சைக்காரன் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இப்போது 48 அவருக்கு வயதாகும் நிலையில் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் முழு சொத்து மதிப்பு 50 கோடி ஆகும்.

மேலும் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பல கோடி மதிப்பில் பங்களா விஜய் ஆண்டனிக்கு சொந்தமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனிக்கு கார் என்றால் அவ்வளவு பிரியமாம். அதனால் விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்து வருகிறார்.

Also Read : திகிலூட்டும் மர்மம், விஜய் ஆண்டனியின் படம் கொலையா இல்ல தற்கொலையா? படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

மேலும் விஜய் ஆண்டனி வைத்துள்ள கார்களில் மிகவும் விலை உயர்ந்தது பிஎம்டபிள்யூ. இது தவிர மேலும் மூன்று உயர்தர சொகுசு கார்களை வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் மனைவி ஃபர்கானா விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் ஆண்டனியின் பெரும்பான்மையான படங்களை அவர்தான் தயாரிக்கிறார்.

மேலும் சமீபகாலமாக விஜய் ஆண்டனி நடிப்பில் எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓடிக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக சினிமாவில் அவர் நல்ல படங்களை கொடுத்து உயரத்திற்கு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Also Read : விஜய் ஆண்டனி கூட நடிச்சு பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. பட வாய்ப்பு இல்லாமல் கதறும் 5 நடிகைகள்

Trending News