Anirudh Leo Music Copycat: இசை அமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே அசைக்க முடியாதவராய் ஆகிவிட்டார். தற்போது ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்து இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு தான் இருக்கிறது. எந்த அளவுக்கு இவர் வெற்றியைப் பார்த்து இருக்கிறாரோ, அதைவிட பல மடங்கு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று இவர் இசையை காப்பி அடிக்கிறார் என்று சொல்வதுதான்.
சமீபகாலமாகவே ரஜினி, கமல், அஜித், விஜய் என அத்தனை முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் இவர்தான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஆர்டினரி பர்சன் என்னும் பாடல் இருக்கிறது. இந்தப் பாடல் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான பீக்கி பிளைன்டர்ஸ் என்னும் வெப்சீரிஸிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.
வேர் ஆர் யூ என்று தொடங்கும் அந்த பாடலை பால்கெரியா நாட்டைச் சேர்ந்த ஒட்னிக்கா என்பவர் இசையமைத்திருக்கிறார். கடந்த சில தினங்களாக இவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த பாடலை அனிருத் காப்பி அடித்திருப்பதாக செய்திகள் அனுப்பி இருந்தார்கள். அதற்கு பதில் அளித்து இருந்த அந்த பாடலின் இசையமைப்பாளர் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு தான் பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கியது. அனிருத் கடந்த சில வருடங்களாகவே இந்த விஷயத்திற்காக அதிகமாக தாக்கப்பட்டு வருகிறார். இருந்தாலும் இவர் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. இந்திய சினிமா ரசிகர்கள் ஆங்கில பாடல்களை எல்லாம் கேட்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டாரா என தெரியவில்லை.
முன்பெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு லட்சக்கணக்கில் தான் சம்பளம் கொடுப்பார்கள். அனிருத் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு இசை நிகழ்ச்சி வைத்தால் டிக்கெட் விலை என்னவாக இருந்தாலும் வாங்கி பார்ப்பதற்கு அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். அதனால் அவருக்கு சினிமாவில் அதிக பொறுப்பும் இருக்கிறது.
தன்னை நம்பி கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும், தன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களுக்காகவும் அனிருத் இன்னுமே கடின உழைப்பை போட வேண்டும். அதை விட்டுவிட்டு அடுத்தவர் உழைப்பில் பெயர் வாங்க நினைப்பது ரொம்பவே தவறு. நல்ல திறமை இருக்கும் நிறைய பேர் இது போன்ற வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் பொழுது, வாய்ப்பு கிடைத்த அனிருத் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.