அனிருத்தை ஆட்டம் காண வைக்கும் ஜிவி பிரகாஷின் 5 லைன் அப் படங்கள்.. சம்பவம் பண்ண போகும் குட் பேட் அக்லி!

anirudh-gv-prakash
anirudh-gv-prakash

GV Prakash: இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இடையே இப்போதுதான் தரமான போட்டி ஆரம்பித்திருக்கிறது.

அனிருத் வளர்ந்து வந்த காலகட்டம் என்பது ஜிவி பிரகாஷ் முழுக்க சினிமாவின் ஹீரோவாக நடித்த காலம். அதனால் இவர்களுக்குள் போட்டி என்ற பேச்சு இல்லாமல் இருந்தது.

அசுரன் படம் மூலம் மீண்டும் இசையமைக்க திரும்பிய ஜிவி பிரகாசுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் புதிய தொடங்கின.

தற்போது அனிருத்துக்கு தலைவலி கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் கைவசம் இருக்கும் மாஸான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷின் 5 லைன் அப் படங்கள்

கிங்ஸ்டன்: பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி மீண்டும் இணைந்திருக்கும் படம் கிங்ஸ்டன். கடலில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கும் மீனவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

இந்த படத்தின் ராசா ராசா பாடல் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வீர தீர சூரன்: விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படம் வீரதீரசூரன்.

இந்த படம் மார்ச் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வரும் கல்லூரும் காத்து என் மேல என்ற பாடல் ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது.

குட் பேட் அக்லி: கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு அதாவது 2007-ம் ஆண்டு அஜித் நடித்த கிரீடம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

தற்போது குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்தின் ட்ரேட் மார்க் பாட்டான வத்திக்குச்சி பத்திக்காதடா பாடல் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இட்லி கடை: தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய காம்போ தனுஷ்- ஜிவி பிரகாஷ்.

ஒரு சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தங்களுடைய கெமிஸ்ட்ரியை ஆரம்பித்திருக்கிறார்கள் இவர்கள்.

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் இட்லி கடை படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

மாஸ்க்: பிளடி பெக்கர் திரைப்படத்திற்கு பிறகு கவின் நடிப்பில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் படம் மாஸ்க்.

இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner