Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இமான் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டுக்கள்! என்னவாக இருக்கும்?

இமான் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டுக்கள்! என்னவாக இருக்கும்?

நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார். கிராமத்து கதைகளுக்கு இவர் தரும் முக்கியத்தும் மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது. கேரியரில் கஷ்டப்பட்டு மேல் […]

நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார். கிராமத்து கதைகளுக்கு இவர் தரும் முக்கியத்தும் மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.

கேரியரில் கஷ்டப்பட்டு மேல் வந்த இவரின் முதல் திருமணம் சோகத்தில் தான் முடிந்தது.  மேலும் அதற்க்கு சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்றே கூறலாம்.  நல்ல வேலை மக்கள் அதை மறந்துவிட்டார்கள்.  இசையமைப்பாளர் இமான், தனது முதல் மனைவி மோனிகாவை கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தார். இது இமான் குறித்து பல விமர்சனங்களை எழுப்பியது.  மேலும் இமான் சொன்ன விஷயங்கள் பெரும் அளவில் பூதாகரமாக வெடித்தது. 

இந்த நிலையில், இமான், உபால்டு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  உபால்டு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அவருக்கு பெண் குழந்தை ஒன்றும்  உள்ளது.  தற்போது, இவர்கள் இருவரும் சேர்ந்து பல தொண்டுகளை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் இமான் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

ஆம்.  ஆனால் அந்த குழந்தை இமானுக்கு பிறக்கவில்லை.  கண் பார்வையற்ற தம்பதியினர் ஏற்கனவே உள்ள பிள்ளையை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பராமரிக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்கள். 

அவர்களின் துயரத்தை உணர்ந்து, அந்த பெண் குழந்தையை இமான் மற்றும் உபால்டு தத்தெடுத்துள்ளார்.  இது மக்களின் மனதை கவர்ந்துள்ளது.  இந்த தம்பதியை மக்கள் இப்போது பெருமளவில் பாராட்டி வருகின்றனர். 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.