ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தேவாவின் வாழ்க்கையை மாற்றிய பிரபலம்.. சூப்பர்ஸ்டாருக்கு செய்த தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கானா பாடலுக்கு பெயர் போனவர். இவரது இசையில் வெளியான கானா பாடல்கள் இன்றுவரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தேவா ஏவிஎம் ஸ்டுடியோவில் கம்போசிங் செய்து கொண்டிருந்தபோது கவிதாலயாவிலிருந்து கே பாலச்சந்தர் இடமிருந்து போன் கால் வந்துள்ளது. அப்போது தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட தேவா சார் இத்தனை நாளாய் காத்திருந்தேன் கண்டிப்பாக செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதற்கு கே பாலச்சந்தர் என்னுடைய படம் கிடையாது என்னுடைய சிஷ்யன் இயக்குகிறான். அவன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பிறகு யார் ஹீரோ என்று கேட்க மாட்டாயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஹீரோ என கூறியுள்ளார். அதைக் கேட்ட பிறகு தேவா வாயடைத்து என்ன சொல்வது என்று தெரியாமல் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாராம்.

அதாவது சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான பாட்ஷா படத்திற்கு தான் இசையமைக்க தேவாவிடம் பாலச்சந்தர் கேட்டுள்ளார். இவர்களுடன் பணியாற்றுவது மிகப்பெரிய பாக்கியம் என உடனே கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் தேவா.

இப்படி தான் தனக்கு பாட்ஷா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தேவா கூறினார். அதன்பிறகு ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினியின் அண்ணாமலை படத்தில் தேவா இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதுமட்டுமல்லாமல் இப்போது வரை ரஜினிகாந்தின் டைட்டில் கார்டு மியூசிக்கில் தேவாவின் இசை தான் போடப்படும். அந்த அளவிற்கு இவர் இசையமைத்த தீம் மியூசிக் தான் இன்று வரை ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Trending News