ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மனைவி மீது புகார் கொடுத்த இமான்.. இந்த பிளான் நல்லா இருக்கே!

தனது முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்குமாறு இசையமைப்பாளர் டி.இமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கியதாக மோனிகா மீது குற்றம்சாட்டியுள்ளார் டி.இமான்.

விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படம் முலம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் இமான். அந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு வெரோனிகா டோரதி இமான் மற்றும் பிளெசிகா கேத்தி இமான் என்ற இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அந்த இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளும் இமானிடம்தான் இருந்துள்ளன. தன் முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளைத் தான் சந்திக்கக் கூடாது என்பதற்காக அவர்களை வெளிநாடு அனுப்பிவைக்க முயற்சி செய்வதாகவும், அதற்காக குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் தொலைந்ததாகக் கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா, சுமந்த் ஆகியோர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இசையமைப்பாளர் டி இமான், 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு முதன்முறையாக இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார். கடந்த 2019ஆம் விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றார்.

Trending News