புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கொட்டுக்காளி படம் உங்களுக்கு பிடிச்சதா.. அப்போ இந்த படங்களை எல்லாம் கண்டிப்பா பாருங்க

சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பல விருதுகளை வாங்கி குவிக்கிறது. முக்கியமாக சர்வதேச அளவில், படத்திற்கு மிக பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

பின்னணி இசை இல்லாத கொட்டுக்காளி திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருந்தாலும், சினிமா தொடங்கிய காலம் முதலே உலகம் முழுவதும் இதுபோன்ற திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

கொட்டுக்காளி உங்களுக்கு பிடித்தது என்றால் பின்னணி இசை இல்லாத இந்த படங்களையும் நீங்கள் விரும்புவீர்கள்.

  • The wind will carry us: இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது இந்த படம் தான். வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும். இது ஒருஈரான் படம். அப்பாஸ் கியரோஸ்தாமி இந்த படத்தை இயக்கினார். ஈரானின் குர்திஷ் கிராமம் ஒன்றில் மரணத் தறுவாயில் வசிக்கும் முதிய பெண்மணி ஒருவரின் துக்கச் சடங்குகளை ஆவணப்படுத்த பத்திரிகையாளர்கள் குழு ஒன்று பொறியாளர்கள் என்ற போர்வையில் வருகின்றனர். அதற்க்கு பின் நடப்பது கதையாக உள்ளது.
  • Dog Day Afternoon: இந்த படம் அமேசான் ott-யில் உள்ளது. இது ஒரு பிரோகிராபிகள் கிரைம் நாடகம். money heist போல விறுவிறுப்பாக இருக்கும், அதே நேரத்தில் இந்த படத்திற்கும் பின்னணி இசை கிடையாது.
  • No Country for Old men: இந்த படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாக உள்ளது. அமேசான் ott-யில் இந்த படத்தை பார்க்கலாம். சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு வித்தியாசமான படமாக இது உள்ளது.
  • Once Upon A Time In Anatolia: 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ஒரு கிரைம் திரில்லர் படமாகவே உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று இருக்கும். இசையே இல்லாமலும் திகிலை கொடுக்க முடியும் என்று நிரூபித்த ஒரு படம் என்றால் அது இது தான்.
  • Network: 1976 ல் சிட்னி லூமெட் இயக்கத்தில் பிளாக் காமெடி ட்ராமாவாக இந்த படம் உருவானது, இசையே இல்லாமல், உருவான இந்த படம் பல விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

உலக சினிமா ஆர்வலராக இருப்பவர்கள் மட்டுமே கோட்டுக்காளி படம் பிடிக்கும். பார்ப்பதற்கான பொறுமையும் இருக்கும். அந்த படம் பிடித்தவர்களுக்கு நிச்சயமாக இந்த படங்களும் பிடிக்கும்.

Trending News