- ரெபல் ரிட்ஜ்(Rebal Ridge)
ஒரு முன்னாள் ராணுவ வீரர் தனது உறவினரைக் காப்பாற்றப் போராடும்போது, ஊழல் நிறைந்த காவல்துறையினரை எதிர்கொள்கிறார். விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன் நகரும் சிறந்த த்ரில்லர் படம்.
- தி கில்லர்(The Killer)
ஒரு கூலிப்படைக் கொலையாளியின் திட்டம் தவறிப் போகும்போது, அவன் சந்திக்கும் சவால்களையும், அமைதியான முறையில் பழிவாங்கும் முயற்சியையும் இப்படம் விவரிக்கிறது. அமைதியான திரைக்கதையுடன் கூர்மையான விறுவிறுப்பைத் தரும் த்ரில்லர்.
- தி பிளாட்பார்ம்(The Platform)
பல அடுக்குகளைக் கொண்ட சிறையில், மேல் தளத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உணவு கிடைக்கும் விசித்திரமான அமைப்பையும், அதன் மூலம் வெளிப்படும் மனிதர்களின் சுயநலத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிய வித்தியாசமான த்ரில்லர் படம்.
- நௌவேர்(Nowhere)
கர்ப்பிணிப் பெண் ஒருவர் சரக்குக் கப்பலின் கொள்கலனில் சிக்கிக்கொண்டு, நடுக்கடலில் உயிர் பிழைக்கப் போராடுகிறார். ஒவ்வொரு நொடியும் பதற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த உயிர்வாழ்தல் த்ரில்லர்.
- தி கில்டி(The Guilty)
அவசர உதவி அழைப்பு மையத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரி, தொலைபேசி அழைப்பின் மூலமாகவே கடத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு விறுவிறுப்பை ஏற்படுத்தும் த்ரில்லர்.
- ரெப்டைல்(Reptile)
ஒரு கொடூரமான கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மையைக் கண்டறிய முயலும் அனுபவமிக்க புலனாய்வு அதிகாரியின் பயணமே இப்படத்தின் கதை. பல மர்மங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த த்ரில்லர்.
- கேலிபர்(calibre)
வேட்டைக்குச் செல்லும் இரண்டு நண்பர்கள், எதிர்பாராத விதமாக ஒரு சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பதற்றமான சூழல்களையும், அதிலிருந்து தப்பிக்கப் போராடுவதையும் மையமாகக் கொண்ட ஸ்காட்டிஷ் த்ரில்லர்.
- ஃபிராக்சர்ட்(Fractured)
மருத்துவமனைக்குச் செல்லும் மனைவியும் மகளும் திடீரென மாயமாக மறைந்துவிடுகின்றனர். அவர்களைத் தேடும் கணவனுக்கு அடுத்தடுத்து ஏற்படும் குழப்பங்களும் அதிர்ச்சிகளும்தான் இப்படத்தின் விறுவிறுப்பான கதை.
- ஐ கேர் எ லாட்(I Care a Lot)
முதியவர்களின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருந்து, அவர்களின் சொத்துக்களைத் திட்டமிட்டு அபகரிக்கும் பெண் ஒருவரின் வாழ்க்கையில், ஆபத்தான ஒரு பெண்மணி குறுக்கிடுகிறார். அதன்பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.
- பேர்ட் பாக்ஸ்(Bird Box)
கண்ணுக்குத் தெரியாத மர்ம சக்தியிடமிருந்து தப்பிக்க, கண்களைக் கட்டிக்கொண்டு தனது குழந்தைகளுடன் உயிர் பிழைக்கப் போராடுகிறார் ஒரு தாய். திகிலும் பதற்றமும் நிறைந்த உலகப் புகழ்பெற்ற சர்வைவல் த்ரில்லர் படம்.




