வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

Survival Thriller படங்கள் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த படங்களெல்லாம் மிஸ் பண்ணாம பாருங்க

உங்களுக்கு ஹாலிவுட் படங்கள், குறிப்பாக survival thriller படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமா? Survival Thriller படங்கள் என்றாலே ஆரம்பம் முதல் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீட் நுனியில் இருந்து நடுக்கத்தோடு நம்மை பார்க்க வைக்கும். அப்படி மிஸ் பண்ணாமல் நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Cast away: இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது இந்த படம் தான். 2000ல் வெளியான திரைப்படம் Cast away. தீவில் தன்னந்தனியாக சிக்கிக்கொண்ட நபர் நான்கு வருடங்களாக சர்வைவலுக்காக போராடுவதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

Life Of PI: 2012ல் வெளியான திரைப்படம் Life Of PI. இந்திய படங்களில் ஒரு அருமையான படைப்பாக உள்ளது.
கடலில் சிக்கிக்கொண்ட புலி மற்றும் ஒரு சிறுவனின் கதையே இப்படத்தின் கதைக்களம். முக்கியமாக அந்த பசியிலும், புலிக்கும் சிறுவனுக்கும் இடையில் ஏற்படும் நட்பும் புரிதலும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதே நேரத்தில், கடைசியில், என்ன தான் இருந்தாலும், காட்டு மிருகத்துக்கு ஆசா பாசம் கிடையாது என்ற இயற்கையை படத்தில் அழகான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்கள். இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

After Earth: 2013ல் வெளியான அட்வென்ச்சர் சர்வைவல் திரைப்படம் After Earth. படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பல வருடங்களுக்கு பின் பூமி எந்த நிலைமையில் இருக்கும்? பயங்கரமான விலங்குகள் நடமாடும் இந்த பூமியில் அப்பா, மகன் எப்படி எதிர்கொண்டு வாழுகின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்களம். ஆனால் தற்போதைய நிலைமையில் உண்மையில் மோசமான மிருகம் என்றால் மனிதன் தான். அந்த மோசமான மிருகம் அதை விட கொடூரமான மிருகத்திடம் மாட்டினால் என்ன ஆகும் என்பது படத்தின் கதையாக உள்ளது. இப்படத்தை ஜியோ சினிமா ஓடிடியில் பார்க்கலாம்.

Buried: 2010ல் வெளியான திரைப்படம் Buried. 10 நிமிடம் கூட சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டாள் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது. இப்படி இருக்கையில், சவப் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட ஒருவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

நீங்க ஒருவேளை சினிமா ஆர்வலர்களாக இருந்தீர்களானால், நெஞ்சை பதறவைக்கும், திக் திக் நிமிடங்களை தரக்கூடிய இந்த படங்களையெல்லாம் நீங்க கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News