சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அடித்து வெளுக்கும் மழைக்கு பார்க்க வேண்டிய பீல் குட் திரில்லர் வெப் தொடர்.. எந்த OTT-யில் தெரியுமா?

இந்த வருடம் முடியும் தருவாயில் மழை சம்பவம் செய்துள்ளது. fengal புயல் பாதிப்பு ஒரு புறம் என்றால் மறுபக்கம் விழுப்புரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த மாதம் முழுவதும் மழை இருக்கும் என்று தான் எதிர்பார்க்கபடுகிறது. இப்படிபட்ட மழையில், நீங்கள் நிச்சயம் இந்த வெப் தொடரை பார்த்தே ஆகவேண்டும்..

உங்களுக்கு மன்னிப்பு கடிதம் வாசிக்க பிடிக்குமென்றால், இந்த படம் உங்கள் மனதை கவரும். அண்ணன் தங்கச்சி பாசம், நடுத்தர மக்கள் கஷ்டம், கர்நாடகா தண்ணீர் பிரச்சனையை என்று அனைத்தையும் ஒரு காவியம் போல மிகவும் அழகாக இந்த வெப் தொடரில் காண்பித்து இருப்பார்கள்.

இந்த தொடரின் கதை என்னவென்றால், “சேட்டைக்கார அண்ணன், புத்திசாலி தங்கை, இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். தங்கை நன்றாக படிப்பாள்.. அண்ணன் விளையாட்டு புத்தி.. அம்மா மீது கொள்ளை பிரியம்.. அப்பாவை பார்த்தாலே ஈரக்கொலை நடுங்கும்..”

“தான் செய்யும் ஒரு சிறிய தவறால், அப்பாவிடம் சொல்ல முடியாமல் பயந்து, வீட்டுக்கே வராமல் இருக்கிறார்கள்.. செய்த தவறை சரி செய்ய முயற்சி செய்யும்போது, இந்த குழந்தைகள் தொலைந்து விடுகிறார்கள்.. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை..”

பொதுவாக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கிறேன், அவர்களை ஒழுக்கமாக வழக்கிறேன் என்ற பெயரில், அந்த குழந்தைகள் வாழ்க்கையில் பெரும் trauma-வை கொடுத்து வருகிறார்கள். அதை இந்த படத்தில் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இந்த மழைக்கு இந்த வெப் தொடர் நிச்சயமாக ஒரு பீல் குட் அதே நேரத்தில் திரில்லர் experience-ஐ கொடுக்கும். இந்த வெப் தொடரின் பெயர் பாராஷூட். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது. தற்போது நல்ல வரவேற்பை இந்த வெப் தொடர் பெற்று வருகிறது.

Trending News