செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

என்னதான் பல நுணுக்கங்களை கொண்டு கதை இயக்கினாலும் கிராமத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் இது போன்ற படங்களுக்கு மவுசு அதிகம்.

இருப்பினும் இப்படங்களில் ஒரே கதையை மாற்றி மாற்றி இயக்குவதால் மக்களிடையே பெரும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அவ்வாறு கிராமத்து மணம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

தேவராட்டம்: 2019ல் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது.

புலிகுத்தி பாண்டி: 2021ல் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதே கூட்டுக்குடும்பத்தில் ஏற்படும் சூழ்ச்சி, பஞ்சாயத்து போன்ற சராசரி விஷயத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டதால் போதிய விமர்சனங்கள் பெறாமல் தோல்வியை தழுவியது.

Also Read: எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்

விருமன்: 2022ல் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கார்த்தி தன் தந்தை மீது ஏற்படும் மன கசப்பை மையமாக கொண்டு கிராமத்து கெட்டப்பில் எடுக்கப்பட்ட இப்படம் பெரிதளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் சுமாரான வசூலை பெற்று தந்தது.

கொடிவீரன்: 2017 சசிகுமார், விதார்த், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டும், கிராமத்து பின்னணி கொண்டே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்திலும் பெரிதளவு எந்த ஒரு வித்தியாசமும் இல்லாததால் மக்களிடையே பெரிதும் பேசப்படவில்லை.

Also Read: 3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்: சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பை முன்வைத்து, ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். இப்படத்தில் சித்தி இட்னானி, பிரபு, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி இருப்பார்கள். ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

Trending News