
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அண்ணாமலையின் நண்பர் பரசுராமன் மகள் கல்யாணம் ட்ராக் வந்ததற்கு முக்கிய காரணமே ரோகிணியை மாட்டுவதற்காக தான். அந்த விஷயம் தற்போது சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. அதாவது பரசுராமனின் மகள் கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் அங்கு இரண்டு பேர் நகைகளை திருடுவதற்கு வந்து விட்டார்கள்.
அதனால் அவர்கள் மீது சந்தேகப்பட்ட மீனா, முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்துவும் மீனாவும் சேர்ந்து அந்த திருட்டு ஜோடிகளை மண்டபத்தில் தேடிப் பார்க்கிறார்கள். அப்பொழுது கல்யாணம் முடிந்தவுடன் ரவி மற்றும் சுருதி ரெசார்ட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள். அத்துடன் விஜயா அண்ணாமலை ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்கள். மீனா மற்றும் முத்து தான் மண்டபத்தில் இருக்கிறார்கள்.
அப்பொழுது முத்து மற்றும் மீனா திருட்டு ஜோடியை கையும் களவுமாக பிடித்து நகைகளை கைப்பற்றி விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரசுராமன், கசாப்பு கடை மணியிடம் சொல்கிறார். கல்யாணத்திற்கு இரண்டு திருட்டு கும்பல்கள் வந்து நகை திருடி இருக்கிறார்கள். அதை எங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்து நகை மீட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்கிறார்.
உடனே கசாப்பு கடை மணி, அவர்களைப் பார்த்து நன்றி சொல்லி மாலை போட்டு பாராட்ட வேண்டும் என்று மாலையுடன் முத்து மீனாவை சந்திக்க வருகிறார். அந்த வகையில் பல நாள் காத்திருந்த தருணம் அமைந்துவிட்டது என்பதற்கு ஏற்ப முத்துமீனா கண்ணில் கசாப்பு கடை மணி சிக்கிவிட்டார். உடனே அவரிடம் விசாரித்து கேட்கும் பொழுது ரோகினி மாமாவாக நடிக்க வந்தேன் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
அப்பொழுது முத்து இதை அப்படியே எங்கள் வீட்டிற்கு வந்து சொல்ல வேண்டும் என்று மணியே கூட்டிட்டு விஜயா வீட்டுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் அண்ணாமலையை பார்த்து நான் ரோகிணியின் மாமா கிடையாது. என்னை நடிப்பதற்காக கூட்டிட்டு வந்தாங்க, மத்தபடி எனக்கும் இந்த பொண்ணுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டு விஜயா இதெல்லாம் என்ன ட்ராமா என்று ரோகினி இடம் விசாரிக்கிறார். ரோகிணி என்ன சொல்வது என்று தெரியாமல் திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் என்னெல்லாம் பொய் சொல்லி இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு எதுவும் சொல்லாத ரோகிணியை பார்த்ததும் விஜயாவிற்கு கோபம் வந்துவிட்டது. உடனே விஜயா, ரோகினி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்.
இதெல்லாம் கனவு இல்ல நிஜம் போல தான் தெரிகிறது. ஏனென்றால் இப்பொழுது கூட ரோகிணி மாட்டவில்லை என்றால் எப்பொழுதுமே ரோகினி பற்றிய ரகசியங்கள் தெரியாமல் போய்விடும். அத்துடன் நாடகமும் இழுத்து மூடுற நிலைமைக்கு மாறிவிடும். அதனால் நம் எதிர்பார்த்தபடி ரோகிணி வசமாக சிக்கிக் கொண்டார்.