ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரோகிணியை பிளாக்மெயில் பண்ணிய தினேஷை துரத்தும் முத்து.. கல்யாணியின் முகத்திரை கிழிய நேரம் வந்துருச்சு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மற்றும் மனோஜ் அவர்களுடைய வியாபாரத்தை தொடங்குவதற்கு ஷோரூமுக்கு வந்து விட்டார்கள். ஆனால் மனோஜ்க்கு திடீரென்று ஒரு வேலை இருப்பதால் ரோகினிடம் பார்த்துக்கசொல்லி வெளியே கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் கடைக்குள்ளே போன தினேஷ் வழக்கம் போல் ரோகினியை மிரட்டி பணம் கேட்கிறார்.

ஆனால் ரோகிணி என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று சொல்கிறார். உடனே தினேஷ் பணத்துக்கு பதிலாக இங்கிருக்கும் பொருட்களில் எனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி நீ பணம் கொடுக்காமல் எடுத்துட்டு போனால் என் வீட்டுக்காரரிடம் நான் மாட்டிக் கொள்வேன். அவரிடம் எப்படி நான் சொல்லி சமாளிப்பேன் என்று கேட்கிறார்.

முத்துவிடம் வசமாக சிக்கும் தினேஷ்

அதற்கு அந்த தினேஷ் உனக்கு பொய் சொல்வதெல்லாம் கைவந்த கலை தானே, அதே மாதிரி இதுக்கும் ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளித்துக் கொள் என்று அவருக்கு தேவையான பொருட்களை ஆட்டைய போட்டு போய்விட்டார். அந்த நேரத்தில் கடைக்கு வந்த மனோஜ் இந்த பொருட்களை எல்லாம் காணவில்லையே அப்போ ரோகிணி விற்பனை செய்துவிட்டார் என்ற சந்தோசத்தில் கல்லாப்பெட்டியை போய் பார்க்கிறார்.

ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஆன்லைன் மூலமாக பணம் வந்திருக்குமா என்று மொபைலிலும் செக் பண்ணுகிறார். அதிலும் எந்த பணமும் வராததால் ரோகிணி இடம் என்னாச்சு பணம் எதுவும் இல்லை. ஆனால் பொருட்கள் மட்டும் விற்பனை செய்திருக்கிறது எப்படி என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி எனக்குத் தெரிந்த ஒருவர்தான் மாதத்தவனையில் அந்த பொருட்களை எல்லாம் வாங்கிட்டு போயிருக்கிறார்.

நம்பிக்கையானவர் தான் அதனால் கூடிய விரைவில் பணத்தை எல்லாம் கொடுத்து விடுவார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். இருந்தாலும் இந்த தினேஷ் தொல்லை ரொம்ப தாங்கவில்லை என்று புலம்பிய ரோகிணி அவருடைய தோழி வித்யாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி இதற்கு இப்பொழுதே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று புலம்புகிறார். உடனே இருவரும் சேர்ந்து லோக்கல் ரவுடியாக இருக்கும் சிட்டி இடம் உதவி கேட்கிறார்கள்.

அவர் என்ன காரணம் என்று கேட்கும் பொழுது ரோகினி எதுவும் சொல்லாமல் உனக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன். நீ அந்த தினேஷை கொஞ்சம் மிரட்டி என் வழியில் வராதபடி பார்த்துக் கொள் என்று சொல்கிறார். உடனே சிட்டி இந்த ரோகிணியை வைத்து முத்து வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதற்காக ரோகினி சொன்னபடி அந்த தினேஷை நான் மிரட்டி வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.

அதன்படி தினேஷுக்கு போன் பண்ணி சிட்டி கூப்பிடுகிறார். உடனே சிட்டி, அந்த தினேஷை அடித்து மிரட்டுகிறார். பிறகு அந்த சிட்டி இடம் இருந்து தப்பித்து ஓடிய தினேஷ் ஸ்கூட்டரில் போகும் பொழுது ஒரு முதியவரை தள்ளிவிட்டு போகிறார். இதனை பார்த்த முத்து அந்த நபரை பிடித்து கண்டிக்க வேண்டும் என்பதற்காக தினேஷை ஃபாலோ பண்ணி போகிறார்.

கடைசியில் இந்த தினேஷ் முத்துவிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டு உண்மையை போட்டு உடைக்கப் போகிறார். இதன் மூலம் ரோகிணி யார் கல்யாணி என்பவர் யார் என்ற உண்மையான முகத்திரை கூடிய விரைவில் முத்துவிற்கு தெரிய வரப்போகிறது. ஆனால் முத்து தெரிந்த பிறகு அனைத்து உண்மைகளையும் குடும்பத்திடம் சொல்வாரா அல்லது மறைத்து விடுவாரா என்பது தான் அடுத்த கட்ட கதையாக நகர போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Trending News