வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.. ரோகிணி போல் பொய் பித்தலாட்டம் பண்ணும் மனோஜ்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரே குடும்பத்திற்குள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனி மனநிலை கொண்ட உறவுகளாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் விஜயா மற்ற இரண்டு பையன்கள் மற்றும் மருமகள்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்.

ஆனால் முத்துவையும் மீனாவையும் எப்பொழுதும் அவமானப்படுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி மீனாதான் அந்த வீட்டில் அனைத்து வேலையும் செய்து அனைவருக்கும் பணிவிடையும் பார்த்து ஒரு வேலைக்காரி மாதிரி இருக்கிறார். தற்போது மனோஜ் வேலை தேடிக்கொண்டே வருவதால் முத்து, அயன் பண்ற கடையை சொந்தமாக வைத்து ஒரு பிசினஸ் பண்ணு என்று கொஞ்சம் மட்டம் தட்டி பேசுகிறார்.

உடனே ரோகினி மனோஜை சீக்கிரத்தில் ஒரு வேலையை தேடிக்கொள். இல்லையென்றால் இந்த முத்துவும் மீனாவும் தினமும் நம்மளை அவமானப்படுத்தி நக்கலாக பார்த்து ஏளனம் பண்ணுவார்கள் என்று சொல்கிறார். இதனைக் கேட்ட மனோஜ் வேலை இல்லாமல் விரக்தி அடைகிறார். அப்பொழுது ஒரு ஹோட்டலில் தின கூலியாக வேலை கிடைக்கிறது.

Also read: முடிவுக்கு வரும் ரோகினியின் ஆட்டம்.. விஜயா மூஞ்சில் கரியை பூச போகும் முத்து

உடனே வீட்டிற்கு வந்த மனோஜ் வேலை கிடைத்துவிட்டது அதற்கு அட்வான்ஸாக பணத்தையும் வாங்கி என் மனைவிக்காக அல்வா வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்று அனைவரது முன்னாடியும் சொல்கிறார். இதனை சந்தேகப்பட்டு கேட்ட முத்து, அது எப்படி ஆபீஸ்ல வேலை பார்த்தால் மாச கடைசியில் தான் சம்பளம் கொடுப்பார்கள்.

போன அன்னைக்கே சம்பளம் கிடைக்கிறது என்றால் தின கூலியாகத்தான் வேலையில் சேர்ந்து இருப்பான் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் வழக்கம்போல் அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றி விடுகிறார். இதனை தொடர்ந்து மீனா கழுத்தில் நகை இல்லாமல் இருப்பது குறித்து மறுபடியும் ஒரு பிரச்சினை எழும்புகிறது.

அதற்கு மீனா என் கணவர் நினைத்தால் இன்னைக்கு நாளும் எனக்கு நகை வாங்கி கொடுக்க முடியும். ஆனால் அது எங்களுக்கு ரொம்ப முக்கியமாக தெரியவில்லை என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி முத்து உடனே கிடைத்த பணத்தை வைத்து மீனாவிற்கு தாலி வாங்கிட்டு வந்து குடும்பத்தில் அனைவரும் முன்னாடியும் பொண்டாட்டியை கௌரவப்படுத்தி விஜயா மூஞ்சியில் கரியை பூசி விட்டார்.

Also read: முத்துவின் பாசத்தை அலட்சியப்படுத்தும் விஜயா.. பேராசையால் மருமகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமி

Trending News