வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ரோகிணி கொடுத்த பணத்தில் பிசினஸ் பண்ணும் முத்து.. விஜயா காலில் விழுந்து கெஞ்சும் மீனா, கடுப்பான சுருதி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மற்றும் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்திலிருந்து முத்துக்கு கொடுக்கவேண்டிய இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துட்டு வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் மனோஜ், விஜயா மற்றும் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கூப்பிடுகிறார். பிறகு முத்து மீனா வந்ததும் ரோகிணி அந்த பணத்தை எடுத்து அண்ணாமலையிடம் கொடுக்கிறார்.

நாங்கள் மீனாவின் நகை பணத்தை தருகிறோம் என்று சொன்னபடி இப்போதைக்கு இரண்டு லட்ச ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன் வாங்கிக்கோங்க என்று கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை என்னுடைய பணம் இல்லல்ல, அது யாருக்கு சேர வேண்டியமோ அவர்களிடம் போய் மன்னிப்பு கேட்டு கொடு என்று மனோஜிடம் சொல்கிறார்.

விஜயாவுக்கு அடிமையாக இருக்கும் மீனா

ஆனால் மன்னிப்பு கேட்க மனம் இல்லாத மனோஜ் முத்துவிடம் பணத்தை நீட்டுகிறார். அப்பொழுது ஸ்ருதி, நீங்க பண்ணினது தப்பு தானே மன்னிப்பு கேளுங்க என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி அதுதான் திருப்பிக் கொடுப்பதற்கு பணத்தை ஏற்பாடு பண்ணிட்டோம் இல்ல. பேசாம எதுவும் சொல்லாமல் வாங்க சொல்லுங்க என்று சொல்கிறார்.

உடனே அண்ணாமலை, முத்துவிடம் எந்த பிரச்சனையும் வேண்டாம் வாங்கிக்கோ என்று சொல்கிறார். அப்பொழுது ரோகினி இன்னும் மீதமுள்ள 2 லட்ச ரூபா பணத்தை நான் சீக்கிரத்தில் தந்து விடுகிறேன் என்று சொல்கிறார். இதை பார்த்த விஜயா உங்களுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி என்னுடைய அப்பாவிடம் கேட்டேன் அவர்தான் எனக்கு அனுப்பி வைத்தார் என்று சொல்கிறார்.

அப்பொழுது முத்து, கேட்டது தான் கேட்ட அப்படியே எனக்கு கொடுக்க வேண்டிய மொத்த பணத்தையும் கேட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பா பணத்தையும் மனோஜ் திருடிட்டு போய் விட்டான். அதையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கேட்டு கொடுக்க வேண்டியது தானே என்று நக்கல் அடிக்கிறார்.

உடனே ரோகிணி எல்லாமே கூடிய சீக்கிரத்தில் கொடுத்துருவோம் என்று பிசினஸ் பண்ணும் தைரியத்தில் நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆனால் அந்த கடையே இல்லாமல் போகும் அளவிற்கு ஏமாந்து போய் நிற்கப் போகிறார்கள். பிறகு இந்த பணத்தை வைத்து நகை வாங்கலாம் என்று மீனாவிடம் சொல்கிறார். ஆனால் மீனா எனக்கு இப்பொழுது நகை தேவையில்லை.

மாடியில் நமக்கு என்று ஒரு ரூம் கட்ட வேண்டும். அதற்கு நாம் நல்ல சம்பாதிக்க வேண்டும். அதனால் இந்த பணத்தை வைத்து இன்னொரு கார் வாங்கி அதற்கு ஒரு டிரைவர் போட்டு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்கிறார். இதுவும் சரியான ஐடியா தான் என்று முத்து வேறொரு காரை பார்க்கப் போகிறார். அந்த வகையில் இவர்களுடைய பிசினஸும் நல்லபடியாக தொடர்ந்து போகிறது.

இதற்கிடையில் மாமா அத்தை இடம் பேச மாட்டிக்கிறார் என்று மீனா கவலைப்படுகிறார். அந்த வகையில் சுருதி மற்றும் ரோகினி இடம் பேசி எப்படியாவது நம்ம மூன்று பேரும் சேர்ந்து மாமா அத்தையே பழைய மாதிரி பேச வைக்கணும் என்று சொல்கிறார். அதற்கு நாம் ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் அவர்கள் கோபம் தீர்ந்து விட்டால் அவர்களை பேசிக்கொள்வார்கள் என்று சுருதி சொல்லுகிறார்.

உடனே மீனா, அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது நாம் ஏதாவது முயற்சி பண்ண வேண்டும் என்று விஜயாவிடம் பேசப் போகிறார்கள். போன இடத்தில் வழக்கம் போல் விஜயா, மீனாவை திட்டுகிறார். அதற்கு சுருதி, உங்க மேல எல்லா தப்பையும் வச்சுக்கிட்டு எதுக்கு நீங்க மீனாவை திட்டுறீங்க. நீங்க பண்ணின தப்புக்கு மீனாவிடம் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கரராக பேசுகிறார்.

ஆனால் மீனா, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீங்கள் மாமாவிடம் பேசினால் போதும் என்று விஜயாவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார். இந்த மீனா எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப அந்த வீட்டில் ஒரு அடிமையாக தான் வாழப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News