Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தியை தேடி மகேஷ் பித்து பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவர்கள் ரெண்டு பேரையும் நேரில் பார்க்கும்போது மகேஷ் என்ன செய்வான் என்பதுதான் இந்த வாரத்தின் பெரிய எதிர்பார்ப்பு.
கண்டிப்பாக இந்த விஷயத்தில் மித்ரா கூட்டத்தில் யாரோ ஒருவர் மாட்டிக் கொள்வார் என்பது உறுதியாக தெரிந்து விட்டது. குடோனில் இருக்கும் சிசிடிவி கேமரா தான் அதற்கு காரணம். இரவு முழுவதும் அன்பு மற்றும் ஆனந்தியை தேடிக் கொண்டிருந்தவர்கள் மொத்தமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள்.
அங்க போய் அன்பு, ஆனந்தியை காணவில்லை என்று புகார் அளிக்கிறார்கள். ஒரு வயசு பொண்ணும், பையனும் காணாமல் போனால் என்ன நடந்திருக்கும் தெரியலையா போலீஸ் நக்கலாக கேள்வி கேட்கிறார். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மித்ராவுக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது.
அதே நேரத்தில் அன்புவின் அம்மா முத்துவுக்கு போன் செய்து அன்பை காணவில்லை என்று சொல்கிறார். உடனே பதறிப் போன முத்து, அன்புக்கு குடோனில் வேலை இருந்தது. அவன் கண்டிப்பாக அங்கே தான் இருப்பான் என சொல்கிறான்.
இப்போ மொத்தமாக இவர்கள் எல்லோரும் கிளம்பி குடோனுக்கு போக தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் சொல்லும் உண்மையை மகேஷ் நம்புகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- குடோனுக்குள் மாட்டிக்கொண்ட அன்பு ஆனந்தி
- மித்ரா, கருணாகரன் செய்த கூட்டு சதி
- தேரை இழுத்து தெருவில் விட்ட ஆனந்தி