வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சத்யாக்காக ஜெயிலுக்கு போகும் முத்து, போலீஸிடம் கெஞ்சும் மீனா.. பேராசையால் பணத்தை இழக்க போகும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா தம்பி காலேஜுக்கு சரியா போகாததால் எக்ஸாம் எழுத முடியாத சூழ்நிலை வந்துவிட்டது என்பதால் கவலையில் வீட்டில் சாமி இடம் புலம்பிக்கொள்கிறார். அந்த நேரத்தில் சுருதிக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதை வாங்க மீனா போகிறார். ஆனால் விஜயா என் மருமகளுக்கு வந்ததை நான் வாங்குகிறேன்.

நீ போய் உன் வேலையை பாரு என்று வழக்கம் போல் மீனாவை திட்டி விடுகிறார். உடனே விஜயா அந்த பார்சலை வாங்கிய பின்பு அதை ஓபன் பண்ணி என்ன இருக்கு என்று பார்க்கிறார். இதை பார்த்த மீனா, சுருதிக்கு வந்தது நீங்க ஏன் ஓபன் பண்ணுறீங்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா என் வீட்டுக்கு என் மருமகளுக்கு வந்திருக்கிறது, நான் ஓபன் பண்ணி பார்ப்பேன் உனக்கு என்ன என்று திட்டி விடுகிறார்.

சத்யாக்கு நல்லது செய்ய பிரச்சனையில் மாட்டிக் கொண்ட முத்து

பிறகு பார்சல் வாங்கியதும் விஜயா ஓப்பன் பண்ணி பார்க்கிறார். அதில் ஹெட்போன் வந்திருக்கிறது. உடனே அதை காதில் மாட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்து ரசிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த சுருதி, விஜயாவை பார்த்ததும் எனக்கு வந்த பார்சலை நீங்க எப்படி ஓபன் பண்ணலாம். எனக்கு என்னுடைய பொருளை மத்தவங்க பயன்படுத்தினால் சுத்தமாக பிடிக்காது.

தயவு செய்து இனி என்னுடைய பொருளை இப்படி என் அனுமதியில்லாமல் ஓபன் பண்ணி பார்க்காதீங்க என்று விஜயாவை நல்ல அவமானப்படுத்தும் அளவிற்கு சுருதி பேசிவிட்டு போய்விடுகிறார். உடனே ரவி, நீங்க ஏன் அவளுடைய பொருளை எடுத்தீங்க என்று சொல்லி விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயா என்னுடைய வீட்டில் இருந்து கொண்டு என்ன அதிகாரம் பண்ணுகிறாய் உன் பொண்டாட்டி.

அதை பற்றி நீ கேட்க மாட்டியா என்று ரவியை கோபமாக திட்டுகிறார். பிறகு இந்த கோபத்தை எல்லாம் விஜயா, மீனாவிடம் காட்டுகிறார். அடுத்ததாக முத்து மற்றும் மீனா, சத்யா படிக்கும் காலேஜுக்கு போகிறார்கள். அங்கே காலேஜ் முதல்வரை பார்த்து பேசுவதற்காக முத்து முயற்சி எடுக்கிறார். ஆனால் அவரை பார்த்து பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த காலேஜ் முதல்வரை பற்றி தெரிந்து கொள்கிறார்.

பிறகு இவரை பார்த்து எப்படியாவது பேசி சத்யாவை எக்ஸாம் எழுத வைக்கணும் என்று முத்து ஒரு பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் தினம் தோறும் அந்த முதல்வர் நடந்துபோகும் ரோட்டில் ஒரு சம்பவத்தை செய்வதற்கு முத்து தயாராகி விட்டார். அதாவது முத்து குடித்துவிட்டு மீனாவிடம் பிரச்சினை பண்ணும் விதமாக ஒரு டிராமா போடுகிறார். இதை பார்த்த காலேஜ் முதல்வர் போலீஸ்க்கு போன் பண்ணி முத்துவை அரெஸ்ட் பண்ண சொல்கிறார்.

அப்பொழுது அங்கே இருந்த மீனா, முத்து மீது தவறு இல்லை என்று போலீஸிடம் சொல்கிறார். இந்த சூழ்நிலையில் காலேஜ் முதல்வரிடம் மீனா தம்பிக்கான நியாயத்தை கேட்டு பரிட்சை எழுதுவதற்கு சம்மதத்தை வாங்கப் போகிறார். இது எல்லா பிளானுமே முத்து, சத்யாவுக்காக போட்டு கொடுத்த பிளான். அதன்படி இனி சத்யா காலேஜில் எக்ஸாம் எழுதுவதற்கு எந்த பிரச்சனையும் வராது.

அடுத்ததாக மனோஜ், ஷோரூம் இல் வியாபாரமே இல்லை என்று கவலையில் இருக்கும் பொழுது அங்கே வேலை பார்க்கும் ஒருவர் அட்வான்ஸ் பணம் கேட்கிறார். அதற்கு மனோஜ் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லுகிறார். அப்பொழுது லாட்டரி சீட் மூலம் கோடீஸ்வரன் ஆகிட்டேன் என்று ஒருவர் மனோஜை பார்த்து பேசுகிறார்.

உடனே மனோஜ் லாட்டரி சீட்டில் இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று பேராசைப்பட்டு அவரை நம்பி பணத்தை இழக்கப் போகிறார். மனோஜ் எப்படிப்பட்டவர் என்று ஏற்கனவே அந்த கடையில் வேலை பார்க்கும் நபருக்கு தெரியும். அதனால் அங்கு இருப்பவர்கள் போட்டுக் கொடுத்த பிளான் படி மனோஜை ஏமாற்றுவதற்கு நடக்கும் டிராமா போல் தெரிகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News