Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பணம் இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று சொல்வது நிதர்சனமான உண்மை. இதை முத்து மற்றும் மீனா அவருடைய குடும்பத்தின் மூலம் நல்லாவே அனுபவித்து வருகிறார்கள். படிப்பும் இல்லை, நல்லா வேலையும் இல்லை, அதனால் பணம் வசதியும் கம்மியாக இருப்பதால் விஜயா, மீனாவை மட்டம் தட்டி ஒரு வேலைக்காரி போல் தான் நடத்துகிறார்.
அதே மாதிரி முத்துவையும் தன் மகன் என்பதை மறந்து ஏதோ விரோதி மாறி தான் நடந்து கொள்கிறார். ஆனால் பணக்கார மருமகளாக சுருதி மற்றும் ரோகினி இருக்கிறார்கள் என்று நினைத்து விஜயா ஓவராக அவர்களுக்கு சப்போர்ட் செய்து தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ஆனால் இதில் உண்மையான பணக்காரி சுருதி மட்டுமே ரோகிணி வெறும் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி குடும்பத்தை ஏமாற்றி மனோஜின் வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறார் என்பதை வருகிற வாரம் தெரிய வரப்போகிறது.
அதாவது ரோகிணி முதலில் சொன்னது பணக்கார வீட்டுப் பெண் என்னுடைய அப்பா வெளிநாட்டில் பிசினஸ் பண்ணுகிறார். தற்போது மலேசியாவில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் என்று பொய் சொல்லி எல்லாரையும் நம்ப வைத்து இருக்கிறார். அடுத்ததாக ரோகினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த மாப்பிள்ளை இறந்து போயிருந்தாலும் க்ரிஷ் என்ற ஒரு குழந்தை இருக்கிறது.
அந்த குழந்தை ரோகிணியின் அம்மாவிடம் தான் வளர்ந்து வருகிறது என்பதையும் யாரிடமும் சொல்லவில்லை. அடுத்ததாக பியூட்டி பார்லருக்கு உண்மையான ஓனர் ரோகினி இல்லை. அங்கே வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் என்பதையும் மறைத்து வைத்திருக்கிறார். இப்படி நிறைய விஷயங்களை மறைத்து வைத்திருக்கும் ரோகிணி ஜீவாவிடம் இருந்து 30 லட்ச ரூபாய் வாங்கி மனோஜ்க்கு ஆசை காட்டி அதை ஷோரூம் வைத்து பிசினஸ் பண்ணலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார்.
அதன்படி மனோஜும் அந்த பிசினஸில் வளர்ந்து வந்த நிலையில் தற்போது பேராசையால் அகல காலை வைத்து ஏமாற்றம் அடையப் போகிறார்கள். அதாவது புது வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்த ரோகிணி மற்றும் மனோஜ் ஏமாற்றும் கும்பலிடம் மாட்டிக் கொண்டு பணத்தை இழந்து விட்டார்கள்.
இது தெரியாத ரோகிணி மற்றும் மனோஜ் வாங்க போகும் புது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி கண்ட கனவு என்னவென்றால் மாமாவிடம் பணம் விஷயமாக பேசுகிறேன் என்று அனைவரும் முன்னாடியும் வித்யாவிடம் பேசியது விஜயாவிற்கு தெரிந்து விட்டது. அதனால் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா, ரோகினியை எழுப்பி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுற மாதிரி கனவு கண்டார்.
இதனால் பயந்து எழுந்த ரோகினி இந்த கனவு எங்கே நினைவாகி விடுமோ என்று இன்னும் பயப்பட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ரோகினி கண்ட கனவை நிஜமாக்கும் விதமாக முத்து மற்றும் ஜீவா மூலம் அனைத்து உண்மைகளும் தெரிய வரப்போகிறது. இத்துடன் ரோகிணியின் அத்தியாயம் முடிய போகிறது என்பதற்கு ஏற்ப குடும்பத்திடம் மாட்டிக் கொண்டால் மீனாவை விட பாவமாக கல்யாணி வாழ்க்கை அமைய போகிறது.
அது மட்டுமில்லாமல் இப்போதைக்கு ஏமாந்த விஷயமும் ஜீவாமிடமிருந்து 30 லட்சம் வாங்கிய விஷயம் மட்டும் வெளிவருவதால் ஓரளவுக்கு மனோஜுடன் வாழ்வதற்கு பிரச்சினை வராமல் போய்விடும். இருந்தாலும் இனி அடுத்தடுத்து ரோகிணியின் ரகசியத்தை முத்து கண்டுபிடித்து விடுவார்.