புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மனோஜ் மூஞ்சியில் கரியை பூச புதுசாக பிசினஸ் பண்ண போகும் முத்து.. மாமா மூலம் மாட்டிக்கொள்ள போகும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஆசைப்பட்டு துவங்கிய ஷோரூமுக்கு தற்போது ஓனராக இருக்க முடியவில்லை. அந்தப் பொறுப்பு அப்பாவிடம் போய்விட்டது என்பதால் ரோகினிடம் புலம்பி கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வு உங்க அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்தால் எல்லா பிரச்சினையும் சரி செய்து விடுவேன் என்று மனோஜ், ரோகினிடம் சொல்கிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட ரோகினி நீயும் உங்க அம்மாவும் எதற்கெடுத்தாலும் எங்க அப்பாவிடம் பணம் கேட்டு ஏன் என்னை டார்ச்சர் பண்ணுகிறீர்கள். எங்க அப்பா கொடுக்கிற நிலைமையில் இருந்தா கொடுத்திருப்பார். இப்பொழுது அவர் ஜெயிலில் மாட்டிக் கொண்டதால் அவரால் எதுவும் உதவி பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இதை தெரிந்தும் நீயும் உங்க அம்மாவும் அடிக்கடி பணம் கேட்பது எனக்கு கடுப்பாக இருக்கிறது என்று திட்டி விடுகிறார்.

உடனே அப்படி என்றால் வேறு என்ன வழி இருக்கிறது என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு ரோகிணி நம்மளை ஏமாற்றிய அந்தக் கதிரை கண்டுபிடித்து பணத்தை வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து சொன்னபடி அந்த நடிகர் வீட்டுக்கு போய் விசாரிக்கலாம் என மீனா பூ கொடுப்பது போல் போவதற்கு தயாராகி விட்டார். ஆனால் மீனா போவதற்கு முன் அங்கே சிந்தாமணி போயி அந்த நடிகரின் தங்கை கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணும் மண்டபத்தில் டெக்ரேசன் பண்ணுவதற்கு பேசிட்டு வந்திருக்கிறார்.

இது எதுவும் தெரியாத மீனா, சிந்தாமணி வெளியே வந்த பிறகு நடிகர் வீட்டிற்குள் சென்று நான் இந்த தெரு முழுவதும் வீடு வீடாக பூ கொடுத்து வருகிறேன். அதே மாதிரி உங்க வீட்டுக்கும் நான் கொண்டு வந்து தரவா என்று கேட்கிறார். உடனே அந்த நடிகர் ஓகே என்று சொல்லிய நிலையில் மீனா சந்தோஷமாக வீட்டிற்குள் இருந்து வெளியே வருகிறார். ஆனால் சிந்தாமணி நமக்கு போட்டியாக இந்த ஆர்டரை வாங்குவதற்கு மீனா வந்திருக்கிறார் என்று நினைத்து மீனாவை திட்டுகிறார்.

அப்போதுதான் மீனாவுக்கே புரிகிறது, இந்த நடிகரின் தங்கை கல்யாணம் ஏற்பாடு நடைபெறுகிறது. அந்த மண்டபத்தில் நாம் பூக் கட்டிக் கொடுக்கலாமே என்று யோசித்து உடனே வீட்டுக்குள் சென்று மறுபடியும் அந்த வாய்ப்பை கேட்டுவிட்டு வருகிறார். பிறகு சிந்தாமணி இடம் எனக்கு இங்கே கல்யாணம் நடக்கப் போகிறது என்பது தெரியாது. நான் சாதாரணமாக பூ கொடுப்பதற்காக தான் வந்தேன். ஆனால் நல்லவேளை நீங்கள் எனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க.

இதே மாதிரி எந்த வீட்டில் என்ன பங்க்ஷன் நடக்குது என்ற தகவலை சொன்னால் நான் அதற்கு கமிஷன் தருகிறேன் என்று சிந்தாமணியை நோஸ்கட் பண்ணி விட்டு போய்விடுகிறார். அடுத்ததாக முத்துவின் நண்பர் செல்வம் கார் சொல்லிக் கொடுக்கும் டிரைவிங் லைசென்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று கேட்கிறார். முத்துவும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறது இதைப்பற்றி மீனாவிடம் கேட்கலாம் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் மீனாவும் வந்து விடுவதால் முத்து அவருடைய புது பிசினஸ் பற்றி சொல்கிறார். ஆனால் இதற்கு வீட்டின் அட்ரஸை கொடுத்து துவங்கினால் அம்மா ஏதாவது சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் நேரம் பார்த்து அம்மாவிடம் சொல்லிவிட்டு பிசினஸை ஆரம்பிக்கலாம் என்று முத்து மற்றும் மீனா முடிவெடுத்து விட்டார்கள். அடுத்ததாக வீட்டிற்கு போன நிலையில் அண்ணாமலையை பார்த்து மனோஜ் ஏமாந்த அந்த நபரை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு சில விஷயங்களை விசாரித்துக் கொண்டு வருகிறோம்.

கூடிய சீக்கிரத்தில் கையும் களவுமாக பிடித்து விடுவோம் என்று முத்து சொல்கிறார். உடனே மனோஜ் நீ கண்டுபிடித்து அந்த பணத்தை உடனே என்னிடம் கொடுத்து விடு என்று முத்து மீது நம்பிக்கையில்லாத போல் பேசுகிறார். அதற்கு முத்து உன்ன மாதிரி நான் மற்றவர்கள் பணத்துக்கு ஆசைப்படவும் மாட்டேன், யாரிடமும் ஏமாறவும் மாட்டேன். அதனால் பணத்தை உன்னிடம் கொடுத்து விடுவேன் கவலைப்படாதே என்று சொல்கிறார்.

அடுத்ததாக விஜயா, மீனாவை வேலை வாங்கும் அளவிற்கு அடுப்பங்கரையில் பால் காய்ச்சி கொண்டு வர சொல்கிறார். அதற்கு முத்து, இத கூட பார்லர் அம்மா பண்ணாதா? உங்களுக்கு எது வேணுமோ இனிமேல் ரோகினி கிட்டையே கேட்டுக்கோங்க என்று சொல்லி போய் விடுகிறார். உடனே விஜயா, மனோஜ் மற்றும் ரோகினிடம் நீங்கள் கூடிய சீக்கிரத்தில் அந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் தான் எனக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று கரராக பேசி விடுகிறார்.

இதையெல்லாம் தாண்டி முத்து அந்த கதிரை கண்டுபிடிக்கும் பொழுது ரோகினி மாமா என்று நடிக்க வந்த கசாப்பு கடை மணியை சந்திக்கப் போகிறார். அப்பொழுது அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ரோகிணி மாமா இவர் இல்லை என்ற விஷயத்தை போட்டு உடைக்க போகிறார். இந்த கசாப்பு கடை மணி மூலம் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்ற உண்மை வெளியே வரப்போகிறது.

Trending News