புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரோகினியை பொறிவைத்து பிடிக்கப் போகும் முத்து.. மனோஜை நம்பி தப்பு கணக்கு போட்ட கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினியின் மகன் மற்றும் அம்மா, விஜயா வீட்டுக்கு வந்ததால் மாட்டிக் கொள்வோமோ என்ற பதற்றத்தில் ரோகினி இருக்கிறார். இதனால் எப்படியாவது இந்த வீட்டை விட்டு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி ஒவ்வொருவரையும் வெளியே அனுப்பி விடுகிறார்.

அடுக்கடுக்காக பொய் பித்தலாட்டம் பண்ணும் ரோகினி

அப்படி அனைவரும் வெளியே போன நேரத்தில் ரோகிணி, அம்மாவிடம் நீ ஏன் இங்கே வந்தாய். நான் சந்தோஷமாக இருக்கிறது உனக்கு பிடிக்கலையா, இப்பதான் நானும் மனோஜும் புது பிசினஸ் ஆரம்பித்து என்னுடைய வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டிருக்கிறோம். அதையெல்லாம் கெடுக்கும் விதமாக நீ கிரிஷ் இங்கே கூட்டிட்டு வந்து என் சந்தோஷத்தை கெடுக்க போகிறாயா என்று வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போடுகிறார்.

இதைக் கேட்ட ரோகிணி அம்மா, வாய மூடு நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் என்னுடைய கஷ்டத்தை எதுவும் உன்னிடம் சொல்லாமல் இருக்கிறேன். உன் பையனுக்கு அடிபட்டது என்று தெரிந்ததும் மீனா முத்து கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்கள். இதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் உனக்கு போன் பண்ணி சொன்னேன்.

மத்தபடி உன்னுடைய சந்தோசத்தை கெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை என்று சொல்கிறார். இதை அனைத்தையும் கேட்ட கிரிஷ், அப்படியென்றால் நீங்கள் தான் என்னுடைய அம்மாவா என்று ரோகிணியை பார்த்து கேட்கிறார். உடனே ரோகினி செண்டிமெண்டாக பேசி க்ரிஷ்சை அரவணைத்துக் கொள்கிறார்.

ஆனால் இனி நான் தான் உன்னுடைய அம்மா என்று யாரிடமும் சொல்லக்கூடாது. அத்துடன் மீனா மற்றும் முத்துவிடவும் பேசக்கூடாது. அப்படி நீ அவர்களிடம் பேசினால் நான் உன்னை பார்க்கவே வரமாட்டேன் என்று மகனை பிளாக்மெயில் பண்ணுகிறார். இதைக் கிட்ட க்ரிஷ், அப்படியெல்லாம் பண்ணாதீர்கள் நான் அவர்களிடம் பேச மாட்டேன் என்று பாசத்தின் வெளிப்பாடாக பேசுகிறார்.

பிறகு ரோகினி, யாரும் வருவதற்குள் இங்கிருந்து கிளம்பி போ என்று அம்மா மகனை வெளியே அனுப்ப நினைக்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்ததால் எதுவுமே நடக்காத மாதிரி அனைவரும் மாறிவிட்டார்கள். அதன் பிறகு முத்து வாங்கிட்டு வந்த உணவை ரோகிணி மகனுக்கு சாப்பாடு கொடுக்கிறார். இதை முத்து ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ் மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு கண் திறக்கும் நேரத்தில் அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே மாதிரி ரோகிணியும் மகனின் ஆசையே நிறைவேற்றுவதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் மகனை பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் பொழுது முத்து மற்றும் மீனாவும் வந்து விடுகிறார்கள்.

ஆனால் அவர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார் ரோகினி. இதன் பிறகுதான் முத்து ஒவ்வொரு விஷயங்களையும் நினைத்து அவருக்கு சந்தேகம் வரப்போகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் ரோகினி பற்றியே விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக முயற்சி எடுக்கப் போகிறார். அதனால் கூடிய விரைவில் முத்து விரித்த வலையில் ரோகிணி மாட்டப் போகிறார்.

இதற்கிடையில் எப்படியாவது மனோஜை நம் கைவசம் போட்டு யார் என்ன சொன்னாலும் கேட்காதபடி தனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில் மனோஜும் ரோகினி உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொண்ட பின் அடியோடு வெறுக்கப் போகிறார். அப்பொழுதுதான் ரோகினியின் ஆட்டம் அடங்கும்.

சிறகடிக்கும் சீரியலில் சுவாரசியமான சம்பவங்கள்

Trending News