செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

முத்துவிடம் கையும் களவுமாக மாட்டப் போகும் ரோகிணி.. மீனாவுடன் கூட்டணி போட்டு பிளான் பண்ணும் சுருதி ரவி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தினேஷுக்கு தேவையான 30 லட்சம் பணத்தை எப்படியாவது ரோகினி இடம் இருந்து வாங்க வேண்டும் என்று அவ்வப்போது பயமுறுத்தி வருகிறார். அந்த வகையில் மனோஜை நேரடியாக சந்திக்கும் விதமாக சாமியார் வேஷம் போட்டு பேச ஆரம்பித்து விடுகிறார். இதைக் கூடவே இருந்து பார்த்து எதுவும் பண்ண முடியாமல் ரோகிணி பயத்துடன் வேடிக்கை பார்க்கிறார்.

அத்துடன் மனோஜ்க்கு மொட்டை கடுதாசி போட்டு யார் பயமுறுத்தினார் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக மனோஜ், முத்துவின் போட்டோவை காட்டி இவர்தான் உன்னிடம் மொட்டைக் கடுதாசி கொடுத்து அனுப்பினாரா என்று கேட்கிறார். தினேஷும் அந்த நேரத்தில் எதையாவது சொல்லி தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆமாம் என்று சொல்லிவிடுகிறார்.

ரோகிணி முத்துவிடம் மாட்டக்கூடிய தருணம் நெருங்கிவிட்டது

உடனே மனோஜ் வீட்டில் வந்து பிரச்சினை பண்ணி முத்து மீது தவறு இருப்பதுபோல் சண்டை போடுகிறார். ஆனால் முத்து நான் எதுவும் பண்ணவில்லை என்று மனோஜை அடிக்க வரும் பொழுது மனோஜின் பாதுகாவலர் முத்துவை தடுக்கிறார். உடனே அனைவரும் பாடிகார்டு முத்துவை அடித்து விடுவார் என்ற பயத்தில் பார்க்கிறார்கள். ஆனால் முத்து இவர் எல்லாம் அசால்ட்டு எனக்கு என்று சொல்வதற்கு ஏற்ப அந்த பாடிகார்டை அடித்து கீழே தள்ளி விடுகிறார்.

அந்த பாடிகார்டு அழுதுவிட்டு ஓடோடி போய் விடுகிறார். கடைசியில் மனோஜ் குடும்பத்தின் முன் அசிங்கப்பட்டு நிற்கிறார். பிறகு முத்து என்ன விவரம் என்று கேட்கும் பொழுது மனோஜ் நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே மீனா எனக்கு என்னமோ அந்த சாமியார்தான் அந்த மொட்டை கடுதாசியை கொடுத்து மனோஜை பயமுறுத்துகிறார் என்பது போல் தெரிகிறது என்று சொல்கிறார்.

உடனே சுருதி, ஆமாம் நானும் படித்திருக்கிறேன் ஏதாவது நம் பிசினஸ் பண்ணுகிறோம் என்றால் நம்மிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக பிளாக்மெயில் பண்ணுவதை கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு முத்து, மனோஜ் ஏதாவது தப்பு பண்ணி இருக்கணும். அதனால்தான் அதை வைத்து பிளாக் மெயில் பண்ணுகிறார் என்று சொல்கிறார்.

உடனே ரவி, அந்த அளவுக்கு மனோஜ்க்கு மாட்டிக் கொள்ளாத அளவுக்கு தப்பு பண்ண தெரியாது என்று சொல்கிறார். அப்பொழுது முத்து, ரோகினி மீது சந்தேகப்பட்டு பேசுவது போல் பேசுகிறார். உடனே இந்த விஷயத்தை டைவர்ட் பண்ணும் விதமாக இந்த மொட்டை கடுதாசி விஷயத்தை நாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே உதாசீனப்படுத்தி விட்டால் அவங்களை அடங்கி போய்விடுவார்கள் என்று ரோகினி சொல்கிறார்.

ஆனாலும் மீனா இதைப் பற்றி போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார். உடனே பதட்டமான ரோகினி போலீஸ் கம்பளைண்ட் எல்லாம் வேண்டாம். பிசினஸில் ஏதாவது கெட்ட பெயர் வந்துவிடும் என்று சொல்லி சமாளித்து மனோஜை உள்ளே கூட்டிட்டு போய் விடுகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்த முத்து, மீனாவிடம் எனக்கு என்னமோ இந்த பார்லர் அம்மா மேல தான் சந்தேகமாக இருக்கிறது என்று பேசுகிறார்.

இதை ஒளிந்திருந்து ரோகினி கேட்டுவிட்டார். இதனை அடுத்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முத்து, மனோஜிடம் அந்த மொட்டை கடிதாசி உனக்கு யார் கொடுத்தார் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி முகம் அப்படியே மாறிவிட்டது.

இதை நோட் பண்ண முத்து மற்றும் மீனா, ரோகினி மீது தான் ஏதோ ஒரு தவறு இருக்குது என்பதை புரிந்து கொண்டார்கள். அதன்படி ரோகிணி பற்றிய ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள். இவர்களுடன் ரவி மற்றும் சுருதியும் சேர்ந்து கொண்டு ப்ளான் பண்ணி ரோகினியை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்.

அந்த வகையில் இந்த பிரச்சனை எல்லாம் சமாளிக்க முடியாமல் ரோகிணி, நேரடியாக லோக்கல் ரவுடி சிட்டியிடம் பார்த்து பேச போவார். அந்த பிளாக் மெயில் பண்ணும் தினேஷை ஏன் ஒன்னும் பண்ணாமல் வைத்துக் கொண்டிருக்கிறாய். அவன் தற்போது மனோஜிடம் பேசி வீட்டில் மிகப் பெரிய பிரச்சினையை வெடிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதனால் தினேஷை நீ என்ன பண்ணுவ என்று எனக்கு தெரியாது. இனி அவன் என் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்கிறார். அதே மாதிரி லோக்கல் ரவுடி நான் உடனே தினேஷை காலி பண்ணி விடுகிறேன். ஆனால் நான் கேட்டபடி முத்துமிடம் இருக்கும் வீடியோ எனக்கு வேண்டும் என்று கேட்கிறார். உடனே ரோகிணி நீ கேட்ட வீடியோவை நான் தருகிறேன். ஆனால் அதுவரை என்னால் இப்பொழுது காத்துக் கொண்டிருக்க முடியாது. நீ தினேஷை இப்பொழுதே ஏதாவது பண்ண வேண்டும் என்று டீல் பேசி விடுகிறார்.

அந்த வகையில் ரோகிணி எங்கே போகிறார் யாரை சந்தித்து பேசுகிறார் என்பதே பின் தொடருந்து முத்து, ரோகிணி ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வார். ஆனால் அது என்ன உண்மை என்ன பிரச்சனை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி ரோகிணியின் முகத்திரையை கிழித்து விடுவார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News