வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரோகினி பிளானை தோற்கடித்து மச்சானுடன் கூட்டணி சேர்ந்த முத்து.. ஸ்ருதியிடம் உதவி கேட்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜின் பேராசையால் பணத்தையும் கடையும் இழந்து தவிக்கப் போகிறார். அப்பொழுதுதான் ரோகினியின் ஒட்டுமொத்த ஆணவமும் அடங்கும் என்பதற்கு ஏற்ப மனோஜ் ஒரு சிக்கலில் மாட்டப் போகிறார். அந்த வகையில் மனோஜ் அவருடைய நண்பரை நம்பி பேராசையால் பெரும் நஷ்டத்தை பார்க்க போகிறார்.

அடுத்ததாக மீனா எப்படியாவது தன்னுடைய தம்பி காலேஜில் எக்ஸாம் எழுதி நல்லபடியாக படித்து முடிக்க வேண்டும் என்று புலம்புகிறார். அப்பொழுது முத்து மது பாட்டிலுடன் வீட்டிற்கு வருகிறார். இதை பார்த்து கோபப்பட்டு சண்டை போடும் மீனாவிடம் முத்து அவருடைய பிளானை எடுத்துச் சொல்கிறார். அதாவது சத்யாவின் காலேஜ் முதல்வருக்கு குடித்து பொண்டாட்டி கொடுமைப்படுத்துவது பிடிக்கவே பிடிக்காது.

முத்துவை வெளியே கொண்டு வர போராடும் மீனா

இந்த ஒரு விஷயத்தை வைத்து காலேஜின் முதல்வரை சென்டிமென்டாக தாக்கி சத்யாவை எப்படியாவது மறுபடியும் எக்ஸாம் எழுத வைக்க வேண்டும் என்று முத்து, மீனாவிடம் பிளான் சொல்கிறார். மீனாவிற்கும் வேறு வழியில்லாததால் முத்து சொன்னபடி சரி என்று சம்மதம் கொடுத்துவிட்டு மறுநாள் கல்லூரியின் முதல்வர் வரும் தெருவில் இந்த நாடகத்தை போடுவதற்கு தயாராகி விட்டார்கள்.

ஆனால் இந்த டிராமாவை பற்றி சத்யாவிடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால் ஒரிஜினலாக நடித்தால் மட்டும்தான் சத்யாவால் எக்ஸாம் எழுத முடியும். அதனால் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று முத்து, மீனாவிடம் சொல்லி விடுகிறார். அதன்படி முத்து குடிக்காமலேயே மதுபாட்டில் கையில் வைத்துக் கொண்டு குடித்த மாதிரி டிராமா பண்ணி மீனாவிடம் பிரச்சினை பண்ணுகிறார்.

மீனாவும், முத்து குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவது போல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். இதையெல்லாம் கல்லூரியின் முதல்வர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த சத்தியா, முத்து உண்மையிலே குடித்துவிட்டு அக்காவை கொடுமைப்படுத்துகிறார் என்று தவறாக நினைத்து முத்துவை திட்டுகிறார். அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த கல்லூரியின் முதல்வரிடம் சத்தியா, இது என்னுடைய அக்கா தான்.

அவருடைய வீட்டுக்காரர் குடிகாரர் தான். ஆனால் இப்பொழுது திருந்தி விட்டார் நல்லபடியாக பார்த்து வருகிறார் என்று என்னுடைய அக்கா சொன்னார். ஆனால் அதற்குள் மறுபடியும் இப்படி குடித்துவிட்டு என்னுடைய அக்காவை கொடுமைப்படுத்தி வருகிறார். இதில் இருந்து என்னுடைய அக்காவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் நல்ல படித்து எக்ஸாம் எழுதி முன்னுக்கு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பமும் நினைக்கிறார்கள்.

ஆனால் இடையில் நான் பண்ணின தவறால் இப்பொழுது என்னால் எக்ஸாம் எழுத முடியவில்லை என்று கல்லூரி முதல்வரிடம் சத்யா சொல்கிறார். உடனே கல்லூரியின் முதல்வர், இனிமேலாவது ஒழுங்கா காலேஜுக்கு வந்து படிச்சு முன்னேற பாரு. அதனால் இப்பொழுது நீ எக்ஸாம் எழுதிக் கொள்ளலாம் என்று அவருடைய சம்மதத்தை கொடுத்து விடுகிறார். இருந்தபோதிலும் இவரை இப்படி விடவே கூடாது என்பதற்காக கல்லூரி முதல்வர் அங்கிருந்து போலீசுக்கு தகவலை கொடுத்து விடுகிறார்.

பிறகு அங்கு வந்த போலீஸ், முத்து செய்த அராஜகத்தை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். இதனால் பதட்டமான மீனா, சத்யாவிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் சத்தியா அவர் பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கட்டும் என்று சொல்கிறார். அப்பொழுது மீனா, மாமா உனக்காக தான் இந்த மாதிரி ஒரு ட்ராமாவை போட்டார்.

அவர் குடிக்கவும் இல்லை என்னை கொடுமை படுத்தவும் இல்லை இது எல்லாமே உனக்காக நாங்கள் போட்ட டிராமா என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே சத்யா மற்றும் மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கே லாக்கப்பில் இருக்கும் முத்துவை பார்த்து மீனா கண்ணீர் வடிக்கிறார். பிறகு அங்கிருக்கும் போலீஸிடம் உண்மையை சொல்லி மீனா மற்றும் சத்யா கெஞ்சுகிறார்கள்.

ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் மேலதிகாரி வெளியே போயிருப்பதால் இன்று விட முடியாது என்று மறுத்து விட்டார்கள். இருந்தாலும் என் கணவரை இன்று நான் வெளியே கொண்டு வருவேன் என்று மீனா முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்று தெரியாததால் சுருதிக்கு போன் பண்ணி நடந்து விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறார்.

அந்த வகையில் சுருதி, அவங்க அப்பா பெயரை பயன்படுத்தி முத்துவை வெளியே கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் முத்துவுடன் சத்தியா மனசார மன்னிப்பு கேட்டு எனக்காக இந்த அளவுக்கு நீங்கள் செய்தது பெரிய விஷயம் மாமா. நான் இதுவரை செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன் என்று செண்டிமெண்டாக பேசி இருவரும் சமாதானம் ஆகி விட்டார்கள்.

தற்போது யார் என்ன பண்ணாலும் இவர்களுக்குள் சண்டை வராதபடி ஒத்துமையாக்கி விட்டார்கள். அதனால் ரோகிணியிடம் அந்த வீடியோ கிடைத்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு ரோகினி பிளான் சுக்குநூறாக உடைந்து பெய்லியர் ஆகிவிட்டது. ஏனென்றால் தற்போது மாமனும் மச்சானும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ரோகினி பற்றிய ரகசியங்களை வெளிக்கொண்டு வரப் போகிறார்கள்.

Trending News