சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிக்கும் முத்து.. சுருதி செய்த காரியத்தால் பேயாட்டம் ஆடப்போகும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா மற்றும் மனோஜ் செய்த பரிகாரத்தை முத்து பார்த்ததோடு மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரது முன்னாடியும் போட்டுக் காட்டி விட்டார். என்னதான் சாமி பரிகாரமாக இருந்தாலும் ஷோரூம் வாசலில் முட்டையை பார்த்து அது சூனியமாக வைக்கப்பட்ட செய்வினை என்று தவறாக புரிந்து அதற்கு பரிகாரம் செய்தது தவறு என்று அண்ணாமலை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் விஜயா, ரோகினி மற்றும் மனோஜ், அந்த முட்டை செய்வினைக்காக வைத்த முட்டை தான். நாங்கள் ஜோசியர் மூலமாக தெரிந்துகொண்டோம். அதற்குப் பிறகுதான் பரிகாரத்தை செய்ய சொன்னார் என்று சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் நம்பாமல் மனோஜ் மற்றும் விஜயாவை பார்த்து நக்கல் அடிக்கும் விதமாக சிரித்து கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் மனோஜின் ஷோரூமில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வந்து அந்த முட்டை சாதாரண முட்டை தான் சூனியம் முட்டை இல்லை என்ற விஷயத்தை சொன்னதும் மனோஜ் திருட்டு முழியுடன் தத்தி போல் அனைவருக்கும் காமெடி பீஸ் ஆக தெரிந்து விட்டார். அத்துடன் விஜயா, சாதாரண முட்டைக்கு என்னை தீச்சட்டி எல்லாம் தூக்க வைத்து கையை வேக வைத்து விட்டாய் என்று திட்டுகிறார்.

ரோகிணியும் மனோஜை ஒரு முட்டாள் மாதிரி பார்த்து அவமானப்படுத்தி விட்டார். இதனை அடுத்து ஸ்ருதி அவருடைய தோழியின் பிறந்தநாள் பங்க்ஷன் இருக்கிறது வா என்று ரவியை கூப்பிடுகிறார். ரவியும் முதலில் ஒகே என்று சொல்லிய நிலையில் ஹோட்டலின் முதலாளி பொண்ணு ரவிக்கு போன் பண்ணி சாயங்காலம் என்னுடன் ஒரு இடத்திற்கு வரவேண்டும் என்று கூப்பிடுகிறார்.

அதன் பிறகு ரவி, சுருதியிடம் எனக்கு சாயங்காலம் வேற வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்ததாக சுருதி தனியாக அந்த ஃபங்ஷனுக்கு போய்விடுகிறார். அதே பங்ஷனுக்கு ரவி முதலாளியின் பெண்ணுடன் கலந்து கொள்ள வந்து விடுகிறார். அங்கே சுருதி, ரவியை பார்த்து நிலையில் கோபத்துடன் பங்க்ஷனை விட்டு வெளியே போகிறார். ஸ்ருதியை சமாதானப்படுத்த ரவியும் பின்னாடி போகிறார்.

ஆனால் ஸ்ருதி, ரவி செய்த காரியத்திற்கு கோபப்பட்டு வெளியேறி விடுகிறார். அடுத்ததாக மீனா பூ கொடுத்துட்டு வரும் பொழுது மீனாவை ஃபாலோ பண்ணும் நபர் மீனாவை பார்த்து பேசுகிறார். உடனே மீனா, முத்துவுக்கு போன் பண்ணி என்னை இரண்டு நாளாக ஒருத்தர் பின்தொடர்ந்து தேவை இல்லாமல் பேசுகிறார் என்று சொல்கிறார். அதற்கு முத்து, அடுத்த முறை நீ அவனைப் பார்த்தால் எனக்கு தகவல் சொல்லு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

இதனை தொடர்ந்து மீனா, பார்வதி வீட்டுக்கு பூ கொடுக்க போகிறார். அங்கே எதார்த்தமாக பேசிய நிலையில் ரோகிணி பற்றி பார்வதி ரொம்ப நல்ல மருமகள் என்று சொல்லிய நிலையில் 2 லட்ச ரூபா பணத்தை ரோகிணி அவருடைய தாலியையும் நகையும் விற்று உனக்காக என்னிடம் கொடுத்து பிரச்சினையை சரி செய்ய சொன்னார் என்று சொன்னதும் மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துவிட்டது.

உடனே மீனா இந்த விஷயத்தை முத்துவிற்கு தெரியப்படுத்தி ரோகினி எதற்காக பணத்தை கொடுக்க வேண்டும். அப்படி என்றால் ரோகிணி தான் அந்த பணத்தை திருடி இருக்கணும் என்று முத்துவுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த வகையில் இதற்குப் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்னவென்று முத்து மற்றும் மீனா கண்டுபிடிக்க போகிறார்கள். அடுத்ததாக மனோஜின் ஷோரூம் கடைக்கு திருஷ்டி போட்டோவை விற்கும் ஒரு நபர் வருகிறார்.

அந்த போட்டோவை வாங்கி பார்த்த ரோகினி இது நம்மளுடைய மாமியார் என்று கண்டுபிடித்து மனோஜிடம் சொல்கிறார். அதாவது ஒரு முறை வீட்டில் விஜயா மீது மாவு டப்பா விழுந்து பேய் மாதிரி இருக்கும் சம்பவம் நடந்திருக்கும். அதை ஸ்ருதி போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் அனுப்பி வைத்தார். அந்த வகையில் சுருதி செய்த காரியத்தால் தற்போது விஜயா திருஷ்டி பொம்மையாக மாறியிருக்கிறார். இந்த விஷயத்தை வைத்து விஜயா, சுருதியிடம் பேய் ஆட்டம் ஆட போகிறார்.

Trending News