Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அது மீனா மற்றும் முத்து விஷயத்தில் நன்றாகவே பொருந்தி வருகிறது. அதாவது வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் பூஜை பண்ணி சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். இதில் எப்படியாவது தில்லாலங்கடி வேலையை பார்த்து முத்துவிடம் இருக்கும் வீடியோவை அபகரித்து விட வேண்டும் என்று ரோகினி பிளான் பண்ணிவிட்டார்.
அதன்படி வித்தியாவிடம் சொல்லி டான்ஸ் ஆடுவதற்கு கொஞ்சம் பேரை கூட்டிட்டு வந்து அனைவரையும் ரோகிணி டைவர்ட் பண்ணி விட்டார். அந்த வகையில் வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாண்டியா ஆட்டம் ஆடி சந்தோஷமாக இருக்கிறார்கள். இதை முத்து வீடியோ எடுக்கும் பொழுது அந்த போனை வாங்கி வித்தியா நான் வீடியோ எடுக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.
முத்து மீனாவை அசிங்கப்படுத்தி வேடிக்கை பார்க்கும் ரோகினி
பிறகு அப்படியே நைசாக கிச்சனுக்கு போய் அதில் இருக்கும் வீடியோவை பார்த்து அனுப்பலாம் என்று யோசிக்கும் பொழுது முத்து மற்றும் மீனா செய்த குறும்புத்தனத்தால் அந்த போன் கீழே உடைந்து விடுகிறது. பிறகு அந்த வீடியோவை ரோகிணியால் எடுக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனாலும் இன்னொரு பிளானை போட்டு எப்படியாவது வீடியோவை எடுக்க வேண்டும் என்ற ரோகினி முயற்சி எடுக்கப் போகிறார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய நாள் கொலு சிறப்பாக முடிந்து விட்டது. மறுநாள் நடக்கும் பூஜைக்கு கிரிசை கூட்டிட்டு வரலாம் என்று மீனா, முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்துவும் மீனா என்ன சொன்னாலும் தலையாட்டி விடுவார். அதுபோல மறுநாளே இரண்டு பேரும் சேர்ந்து க்ரிஷ் பாட்டி ஊருக்கு போகிறார்கள். அங்கே போனதும் க்ரிஷ் பாட்டியிடம் கொலு பூஜைக்கு கலந்து கொள்ள வற்புறுத்துகிறார்கள்.
வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கும் க்ரிஷ் பாட்டியை வலுக்கட்டாயமாக முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து கூட்டிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். வந்ததும் கிருஷ்க்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு பூஜையில் உட்கார வைக்கிறார்கள். அப்பொழுது முத்து மீனாவும், கிரிசை மடியில் உட்கார வைத்து இனி உன்னுடைய அப்பா அம்மா நாங்க தான். நாங்கள் உன்னை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
இதை பார்த்த கிருஷ் பாட்டி போதும் நிறுத்துங்க ரொம்ப ஓவரா தான் பேசுறீங்க. நானும் வாயை திறக்க கூடாது என்று பார்த்தால் நீங்கள் பேசுறதெல்லாம் சரியே இல்லை. சின்ன குழந்தைகிட்ட தத்தெடுக்குறத பத்தி பேசிட்டு இருக்கீங்க. யாருமே இல்லாம அனாதை ஒன்னும் இல்லை. அவனுக்கு பாட்டி அம்மா என்று நாங்கள் இருக்கிறோம்.
இனி எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள், எங்க வீட்டு பக்கமும் வந்து விடாதீர்கள் என்று கோபமாக அனைவரது முன்னாடியும் மீனா மற்றும் முத்துவை திட்டி விட்டு அவமானப்படுத்தி பேசிவிட்டு போய்விடுகிறார். ஆனால் கிரிஸ் பாட்டி இப்படி பேசியதற்கு முக்கிய காரணம் ரோகிணி தான். ரோகிணியின் தூண்டுதலால் தான் க்ரிஷ் பாட்டி இப்படி பேசி முத்து மீனாவை கஷ்டப்படுத்தி விட்டார்.
அப்பதான் இனி கிருஷ் விஷயத்தில் தலையிட மாட்டார்கள் என்பதற்காக ரோகிணி போட்ட பிளான். இதன்படி முத்து மற்றும் மீனா கிரிஷ் பாட்டி பேசியது நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். அத்துடன் மீனா, மறுபடியும் நீலி கண்ணீர் வடித்து அழ ஆரம்பித்து விடுகிறார். இதை தான் சொல்வார்கள் வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்று. என்னதான் இருந்தாலும் பாசம் நேசம் எல்லாம் ஒரு எல்லைக்குள் தான் இருக்க வேண்டும்.
மற்றவர்களிடம் ஓவராக அன்பையும் பாசத்தையும் காட்டி உரிமை எடுத்துக் கொண்டால் அது நமக்கு இப்படித்தான் மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும். அதுவும் ரோகிணி இந்த விஷயத்தில் சகுனி வேலையை பார்த்து எல்லாரும் முன்னாடியும் முத்து மீனாவை அசிங்கப்படுத்தி விட்டார். இனி இதை வைத்தே விஜயா, மீனாவை திட்டிக்கொண்டே இருக்கப் போகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- முத்துவை டைவர்ட் பண்ணி ஆதாரத்தை திருடிய ரோகினி
- கொலுவில் தில்லு முல்லு வேலையை பார்க்கப் போகும் ரோகிணி
- மனோஜ் விஜயா மூஞ்சில் கரிய பூச போகும் ரோகிணி