வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

விஜயாவிடம் இருந்து தப்பித்த முத்து மீனா.. ஜீவா மாதிரி மனோஜின் பணத்தை ஆட்டைய போட போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பணத்தாசை பிடித்த விஜயா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஓவராக தான் ஆடுகிறார். மீனாவிடம் பணம் இல்லாததால் மீனா குடும்பத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் மட்டம் தட்டி பேசுவதையே விஜயாவின் வேலை. அப்படிப்பட்டவருக்கு தற்போது சத்யாவின் பற்றிய ஒரு வீடியோ கிடைத்திருப்பதால் அதையே காரணமாக வைத்து சத்யா மீது புகார் கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அதிலிருந்து சத்யா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் விஜயா கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினால் தான் பிரச்சனை சரியாகும் என்று நிர்பந்தனை இருக்கிறது. அதற்காக முத்து மற்றும் மீனா, அண்ணாமலையிடம் அம்மாவிடம் நீங்கள் எப்படியாவது பேசி சத்யா மீது கொடுத்த புகாரை திரும்ப வாங்க வைக்க வேண்டும் என்று முத்து சொல்கிறார்.

மீனாவும் கெஞ்சி கேட்டதால் அண்ணாமலை, விஜயாவை பார்த்து பேசப்போகிறார். ஆனால் கேசை வாபஸ் வாங்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார் விஜயா. உடனே அண்ணாமலை, திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து சத்யாவை மன்னித்துவிடு என்று கேட்கிறார். அதற்கு விஜயா, நான் கொடுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் அந்த பூக்கட்டும் மீனா வீட்டை விட்டு போக வேண்டும் என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட அண்ணாமலை, அப்படி என்றால் முத்து என்ன செய்வான் என்று கேட்கும் பொழுது விஜயா அவனும் அந்த பூக்காரியுடன் வெளியே போகட்டும் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை உன் பிடிவாதத்துக்கு மருந்தே கிடையாது, இதனால் நீ தான் அவஸ்தைப்பட போகிறாய் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு விஜயா சொன்ன விஷயத்தை அண்ணாமலை, முத்துவிடம் வந்து சொல்லப் போகிறார்.

அந்த வகையில் முத்துவுக்கு, தற்போது சத்யா எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் விஜயா கேட்டுக் கொண்ட படி வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று முடிவு பண்ணி மீனாவை கூட்டிட்டு தனியாக போகப் போகிறார். எது எப்படியோ விஜயாவிடம் இருந்து முத்து மீனா தனியாக போனதால் சந்தோஷமாக இருக்க முடியும் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். அந்த வகையில் ஒரு விதத்தில் விஜயா இவர்களுக்கு நல்லது தான் பண்ணியிருக்கிறார்.

அடுத்ததாக ரோகிணி, தேவை இல்லாமல் முத்து மீனா விஷயத்தில் மூக்கை நுழைத்து அவர் வாழ்க்கையை சூனியம் வைத்துக் கொண்டார். அதாவது சிட்டி மற்றும் PA தற்போது ஒன்று சேர்ந்து ரோகிணியை பிளாக்மெயில் பண்ணி பணம் சம்பாதிக்க பிளான் பண்ணி விட்டார்கள். அந்த வகையில் தற்போது இரண்டு லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கும் சிட்டிக்கு எப்படி பணத்தை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் வேறு வழி இல்லை என்பதால் மனோஜை எப்படியாவது ஏமாற்றி மனோஜிடம் இருக்கும் அண்ணாமலை பணத்தை ஆட்டைய போட வேண்டும் என்று ரோகிணி முடிவு பண்ணப் போகிறார். அதன்படி பொய் சொல்லி எப்படி ஜீவா, மனோஜை ஏமாற்றினாரோ அதே மாதிரி ரோகிணியும் பொய் சொல்லி மனோஜை ஏமாற்றி பணத்தை ஆட்டைய போட்டு சிட்டி இடம் கொடுக்கப் போகிறார். இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து பிரச்சினையை அனுபவிக்க போகும் ரோகிணி பற்றிய விஷயங்களும் ஒவ்வொன்றாக வெளியே வரப் போகிறது.

Trending News