மணியை வைத்து ரோகிணியின் சோழியை முடித்துவிட்ட முத்து மீனா.. வெளிவரப்போகும் கல்யாணியின் ரகசியம்

sirakadikkum asai (78)
sirakadikkum asai (78)

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவை பாராட்டுவதற்காக கசாப்பு கடை மணி மாலை கொண்டுவந்து பார்க்க வருகிறார். அப்படி வரும்பொழுது ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்கள். பிறகு பரசுராமன் இந்த கல்யாணம் நடப்பதற்கு நீங்க எப்படி முக்கியமோ, அதே மாதிரி மாப்பிள்ளையின் தாய் மாமன் இவரும் தான் ரொம்ப முக்கியம் என்று மணியை பற்றி சொல்கிறார்.

உடனே முத்து அப்படிப்பட்ட தாய் மாமாக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன் என்று சொல்லி தனியாக கூட்டிட்டு வந்து விட்டார். அவர் கொண்டு வந்த மாலையை முத்து அவருக்கே போட்டுவிட்டு வீட்டு வாசலுக்கு கூட்டிட்டு வந்து விட்டார். பிறகு வீட்டிற்கு வந்த முத்து, அண்ணாமலை விஜயா ரோகினி மற்றும் மனோஜ் அனைவரையும் ஆஜர் படுத்தி விட்டார். அத்துடன் இன்னைக்கு ஒரு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

நம்ம வீட்டிற்கு ஒரு விருந்தாள் வந்திருக்காங்க என்று சொல்லி வாசலில் நின்று கொண்டிருந்த மணியை உள்ளே கூட்டிட்டு வந்து விடுகிறார். இந்த மணியை பார்த்ததும் ரோகிணி மூஞ்சில் ஈ ஆடல, மொத்த பயமும் கண்ணில் தெரிய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று முத்து ஏதோ உலறுகிறார் என்று சொல்லி மாமாவை கூட்டிட்டு வெளியே போக முயற்சி எடுக்கிறார்.

ஆனால் இது எதுவும் தெரியாத விஜயா மற்றும் மனோஜ் சம்பந்தி சம்பந்தி என்று உருகி உட்கார வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணி கதையை முடிக்கும் அளவிற்கு அணு அணுவாக வச்சு செய்து விட்டார். அதாவது இவர் மலேசியா பக்கமே போனது கிடையாது, ஏன் இவருக்கு பாஸ்போர்ட் கூட கிடையாது. இவருக்கு சொந்த ஊரு சென்னை தான், கறிக்கடை வச்சு நடத்துகிறார். இவர் பரசுராமன் மருமகனின் தாய் மாமன் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.

ஆனாலும் முத்து என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் அனைவரும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். ரோகிணி அவ்வளவுதான் நம்மளை பற்றி தெரிந்து விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி தவிக்கிறார். பிறகு விஜயா மற்றும் அண்ணாமலை இடம், முத்து சொல்வது அனைத்தும் உண்மைதான் நான் கசாப்பு கடை தான் வைத்திருக்கிறேன்.

எனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் மாமாவாக நடிக்க வந்தேன் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். உடனே ரோகினியை பார்த்து பொய் எப்பவுமே நிலைக்காது என்று சொல்லி கிளம்பி விடுகிறார். கடைசியில் நம்ம குடும்பத்தையும் என்னையும் பைத்தியக்காரியாக ஆக்கிவிட்டாலே என்ற கோபத்தில் விஜயா ரோகினியிடம் கேள்வி கேட்கிறார்.

ரோகினி என்ன சொல்வது என்று தெரியாமல் வாயை மூடி கொண்ட நிலையில் விஜயா, ரோகினி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். இதுவரை பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி ஆடி ஆட்டத்திற்கு ரோகிணிக்கு இதுதான் சரியான தண்டனை என்று சொல்லும் அளவிற்கு ரோகினி நிலைமை பார்க்கும்பொழுது குதூகலமாக இருக்கிறது. இதனை அடுத்து கிரிஷ் பற்றிய உண்மையை கண்டறியும் விதமாக கிருஷ்க்கு உண்மையான அப்பா அம்மா யார் என்ற விபரத்தை முத்து மற்றும் மீனா தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

அப்படி தெரிந்து கொண்ட நேரத்தில் கிருஸுக்கு அம்மா ரோகிணி தான் என்ற உண்மை அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கப்போகிறது. ரோகிணி ஒரு பொய்யானவள் கல்யாணி தான் உண்மையான பெயர், ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கிறது என அடுத்தடுத்த உண்மை வெளிவர போகிறது. மனோஜ் குடும்பத்தை ஏமாற்றிய ரோகினிக்கு இனி ஒவ்வொரு நாளும் கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாக தான் இருக்கப் போகிறது.

Advertisement Amazon Prime Banner