
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பல மாதங்களாக இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணி தற்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். அதாவது அண்ணாமலையின் நண்பர் பரசுராமனின் மகள், ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணியின் தங்கச்சி மகன் என்று இவர்களுடைய புது ட்ராக் வந்த பிறகு உறுதியாகிவிட்டது ரோகிணி இதில் சிக்கிக் கொள்வார் என்று.
அந்த வகையில் எதிர்பார்த்தபடியே கல்யாணம் முடிந்த கையுடன் மீனா மற்றும் முத்துவிடம் கசாப்பு கடை மணி மாட்டிக் கொண்டார். முத்து கேட்டுக் கொண்டதன்படி மணி நடந்த விஷயத்தை எல்லாத்தையும் சொல்லி விடுகிறார். உடனே முத்து மற்றும் மீனா இதை இப்படியே வீட்டில் வந்து சொல்ல வேண்டும் என்று சொல்லியதால் நேரடியாக விஜயா வீட்டுக்கு வந்து விடுகிறார்.
கல்யாணத்தில் திருட வந்த ஜோடியை கண்டுபிடித்த மீனாவிற்கு மாலை போட்டு நன்றி சொல்ல வேண்டும் என்று மாலையுடன் வந்த மணி கடைசியில் அவரே அந்த மாலையே போட வைத்துவிட்டு முத்து அலங்காரம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்படி மணியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாகிய நிலையில் ரோகிணி மட்டும் அவ்வளவு தான் சிக்கிட்டோம் என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.
ஆனால் மக்கு மனோஜ் மட்டும், கதிர் திருடிய பணத்தை சரி கட்டுவதற்காக ரோகிணி, அவருடைய மாமாவிடம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தை கொடுப்பதற்காகத்தான் இவர் வந்திருக்கிறார் என்று பேராசையில் விஜயாவிடம் மனோஜ் சொல்கிறார். ஆனால் மணி, அண்ணாமலையிடம் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எல்லோரும் நினைக்கிற மாதிரி நான் ரோகிணி மாமா கிடையாது என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
அத்துடன் ரோகிணியை பார்த்து பொய் எப்பொழுதுமே நிலைக்காது, நடந்த உண்மையை சொல்லிவிடு என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். உடனே அண்ணாமலை, ரோகினி இடம் அவர் சொல்வதெல்லாம் உண்மையா என்று கேட்கிறார். ஆனால் ரோகிணி எதுவும் சொல்லாமல் முழித்துக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா, ரோகினி இடம் கேள்வி கேட்கிறார்.
அப்பொழுது ரோகிணி ஆன்ட்டி என்று சொல்ல வரும் பொழுது விஜயா இப்படி கூப்பிட்டு தான் என்னை ஏமாற்றி விட்டாய் என்று ரோகிணியை பேச விடாமல் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இவ்வளவு தூரம் நடந்தும் மனோஜ் எதுவும் பண்ணாமல் அப்படியே அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு வீட்டிலேயே ஐக்கியமாகிவிட்டார். ரோகிணியும் இனி அவ்வளவுதான் என் கதை முடிந்து விட்டது என்று அம்மா வீட்டுக்கு போகப் போகிறார்.
ஆனால் திடீரென்று ரோகினி மாட்டுவதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து இந்த சீரியலுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. அத்துடன் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து விட்டதால் இயக்குனர் அதிரடியாக முடிவெடுத்த நிலையில் ரோகிணி மலேசியா டிராமாவுக்கு முடிவு கட்டுவதற்கு தயாராகி விட்டார். இனி அடுத்து ரோகிணி மகன் கிரிஷ் பற்றிய விஷயம் வெளிவர போகிறது.