திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க முத்து போடும் பிளான்.. மனோஜ்க்கு மீனா விரித்த வலையில் சிக்கப்போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கிருஷை பார்த்து பேசுவதற்காக முத்து மற்றும் மீனா ஸ்கூலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே வந்த ரோகினியின் அம்மா, முத்து மற்றும் மீனாவிடம் சரியாக பேசாமல் கிரிசை கூட்டிட்டு ஸ்கூலுக்குள் போய்விடுகிறார்கள். அங்கே போனதும் ரோகிணி யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக வீடியோ காலில் மாஸ்க் போட்டு வித்யாவை வைத்து பேச வைத்து அந்த மீட்டிங்கை முடித்து விடுகிறார்.

பிறகு முத்து மீனாவை சமாளித்து கிருஷை கூட்டிட்டு போக பார்த்த ரோகினி அம்மா மீது மீனா சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இந்த க்ரிஷ் மனோஜ் மற்றும் ஜீவாவுக்கு பிறந்த குழந்தையாக இருக்குமோ? அதனால் தான் நம்மிடம் பேச விடாமல் நம்மளை கண்டதும் உதாசீனப்படுத்திட்டு போவதாக மீனா, முத்துவிடம் சொல்கிறார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அண்ணாமலை, வீடியோ காலில் பார்த்த க்ரிஷ் இன் அம்மாவை பற்றி சொல்கிறார். அதாவது முகமே தெரியாத அளவிற்கு க்ரிஷ் அம்மா கண்ணாடி போட்டு மாஸ்க் அணிந்து ஏன் பேச வேண்டும் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த மனோஜ் ஒருவேளை அவங்க வெளிநாட்டில் இருப்பதால் அங்குள்ள ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்களோ என்னமோ? என்று சொல்லி அவங்களுக்கு சப்போர்ட்டாக மனோஜ் பேசி கொண்டிருக்கிறார்.

இதை பார்த்ததும் முத்து மற்றும் மீனா, மனோஜை சந்தேக கண்ணுடனே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி மனோஜும் பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் உதாரணத்திற்கு க்ரிஷ் ரோகினியின் அம்மாவாக இருந்தால் வெளிநாட்டில் வைத்து பேசும் பொழுது அப்படித்தான் பேசி இருப்பாள் என்று சொல்லி ரோகிணியை கூப்பிட்டு சாட்சிக்கு கேட்கிறார்.

ஆனால் ரோகிணி தான் இதில் குற்றவாளி என்பதால் எதுவும் பேச முடியாமல் மற்றவர்களை பத்தி பேசி என்ன ஆகப்போகுது, அவர்களுக்கு என்ன பிரச்சனையோ அதை பற்றி நாம் டிஸ்கஸ் பண்ண தேவையில்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு மனோஜ் ரோகினையை கூட்டிட்டு உள்ளே போய் விடுகிறார். உடனே மீனா இந்த பேச்சை நிறுத்த வேண்டும் என்பதற்காக மனோஜ் எஸ்கேப் ஆகிவிடுகிறார் என்று முத்துவிடம் சொல்கிறார்.

இதனை தொடர்ந்து மீனா, எனக்கு சந்தேகமே இல்லை க்ரிஷ் மனோஜ் மற்றும் ஜீவாவின் குழந்தை தான் என்று உறுதியாக சொல்கிறார். ஆனாலும் முத்து ஆதாரம் இல்லாமல் நாம் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லிய நிலையில் மீனா எனக்கு ரோகிணி நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. உங்கள் அண்ணன் ரோகினிக்கு துரோகம் பண்ணுகிறார், இந்த விஷயம் ரோகிணிக்கு தெரிந்தால் வீட்டை விட்டே போய்விடுவார் என்று ரோகினிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

உடனே முத்து, ஆதாரம் இல்லாமல் நீ எதுவும் சொல்லிக் கொண்டு இருக்காத. முதலில் க்ரிஷ் அம்மா யார் என்ற விஷயத்தை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க வேண்டும். இனி நம்முடைய அடுத்த கட்ட வேலை அதுதான், அதன் பிறகு எதனாலும் முடிவு பண்ணி என்ன பண்ணணுமோ அதை பண்ணலாம் என்று களத்தில் இறங்குவதற்கு முத்து தயாராகி விட்டார். அந்த வகையில் இதுவரை இப்படி யோசிக்காத முத்து முதல் முதலாக க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிப்பதற்கு தயாராகி விட்டார்.

கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப மீனா ஏதோ உளறியதை வைத்து மனோஜ்க்கு விரித்த வலையில் ரோகிணி வந்து சிக்கிக் கொள்ளப் போகிறார். ஆனாலும் முத்து மீனாவுக்கு இந்த உண்மை தெரிந்தால் கூட ரோகிணியை காப்பாற்ற தான் பார்ப்பாங்க. குடும்பத்தில் இருப்பவர்களிடம் உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் முத்து மற்றும் மீனாதான் பெரிய தியாகி லிஸ்ட்ல இருக்காங்களே.

Trending News