புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜயா மனசை குளிர வைக்க படாதபாடு படும் முத்து.. பெட்டி படுக்கையை எடுத்து கிளம்பிய சுருதி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதியை பார்த்து மீனா மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். இதனால் குழப்பத்தில் இருந்த சுருதிக்கு, நடுரோட்டில் விச்சு மூலம் ஏற்பட்ட பிரச்சனையை முத்து தீர்த்து வைக்கிறார்.

அத்துடன் சுருதியிடம் மன்னிப்பு கேட்டு நான் பண்ணின தவறுக்காக என் தம்பியை தனியாக தவிக்க விடுவது சரியில்லை என்று பக்குவமாக பேசுகிறார். உடனே சுருதி வீட்டிற்கு ஆவேசமாக போயி ரவி இருக்கும் வீடு தான் என்னுடைய சொர்க்கம்.

அது மட்டுமில்ல அங்கு இருப்பவர்கள் என்னை நல்லா தான் பார்த்துக் கொண்டார்கள். அதனால் நான் அங்கே போய் விடுகிறேன் என்று அம்மா வீட்டில் இருந்து பெட்டி படுக்கையை எடுத்துவிட்டு மாமியார் வீட்டுக்கு கிளம்பி போகப் போகிறார்.

இதற்கிடையில் விஜயா, ரவியும் சுருதியும் என் வீட்டிற்கு வராமல் நான் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்து அனைவரையும் படுத்தி எடுக்கிறார். இதனால் கொஞ்சம் அப்செட் ஆன அப்பாவை பார்த்து முத்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

விஜயாவை சந்தோசப்படுத்த முயற்சி எடுக்கும் முத்து

அந்த வகையில் இப்போ அம்மாவை நான் சாப்பிட வைக்கிறேன் அப்பா நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார். அதன் பின் பக்கெட் பிரியாணியை வாங்கிட்டு வந்து வாழை இலை போட்டு அதில் கொட்டி தடபுடலான விருந்து சாப்பாடு மாதிரி அனைத்து வகையான உணவுகளையும் வைத்து விட்டார்.

விஜயா மற்றும் ரோகினி ரூமுக்குள் இருந்து மோப்பம் பிடிக்கிறார்கள். அத்துடன் வாசனை அவர்களை சாப்பிட இழுக்கிறது. மனோஜால் கட்டுப்பாடுடன் இருக்க முடியாமல் சாப்பிட தொடங்குகிறார். அதன் பின் ரோகினி மற்றும் விஜயாவும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அம்மாவின் மனசை இன்னும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முத்து எப்படியாவது சுருதியை கூட்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். கடைசியில் அதற்கேற்ற மாதிரி சான்ஸ் கிடைத்ததும் முத்து சுருதியை பார்த்து பேசி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்.

Trending News