வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கல்யாணியை பற்றி தெரிந்து கொண்ட முத்து.. க்ரிஷை தத்தெடுக்க போகும் மீனா, அவஸ்தையில் தத்தளிக்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் ஆசைப்பட்ட மாதிரி ரோகிணி கோட் சூட் வாங்கிட்டு பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கே ரோகிணியை பார்த்ததும் க்ரிஷ் சந்தோஷத்தில் பிறந்தநாளுக்கு தயாராகி விட்டார். பிறகு பக்கத்தில் இருக்கும் நபர்கள், பிரண்ட்ஸ் அனைவரையும் வரவழைத்து கிரிஷ் கேக் கட் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

இந்த சூழ்நிலையில் முத்து, கிரிஷுக்கு எடுத்துட்டு வந்த டிரஸ்சை கொடுத்துட்டு போகலாம் என்று மீனாவை கூட்டிட்டு ரோகினியின் அம்மா வீட்டுக்கு வந்து விடுகிறார். இவர்களை பார்த்ததும் ரோகிணி அடுப்பங்கரையில் போய் மறைந்து கொள்கிறார். அப்பொழுது சரியான நாளில் தான் நாம் வந்திருக்கிறோம் என்று முத்து மீனா வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸை கிரிஸிடம் கொடுக்கிறார்கள்.

ரோகிணி தலையில் இடியை இறக்கப்போகும் மீனா

பிறகு முத்து மீனாவும், கிரிஷை தூக்கி வைத்துக்கொண்டு கேக் கட் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் க்ரிஷ் முகம் வாடி போயி ரோகிணிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் அம்மா அம்மா என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அப்பொழுது முத்து, அம்மாவிற்காக ஏங்குகிறான் என்று நினைத்து ரோகிணியின் அம்மாவை வெளியே கூட்டிட்டு வந்து இவன் பிறந்தநாளுக்கு கூட அவங்க அத்தை வரக்கூடாதா.

அவங்க அம்மா இல்லாத குறையை அவங்க தான தீர்த்து வைக்கணும். அண்ணன் பையன் மேல பாசம் இல்லையா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ரோகிணியின் அம்மா சில உண்மைகளை சொல்கிறார். அதாவது இது என்னுடைய மகன் பையன் அல்ல, என்னுடைய மகளின் பையன் தான் என்று சொல்கிறார். அப்படி என்றால் ஏன் பெத்த பையனை அத்தை என்று கூப்பிட சொல்லி இருக்கிறார் என்று மீனாவும் முத்துவும் கேட்கிறார்கள்.

அதற்கு ரோகிணி அம்மா, என் கணவர் இறந்த பிறகு வீட்டில் நிறைய கடன் பிரச்சினைகள் இருந்தது. அதனால் என் மகள் 19 வயது இருக்கும்பொழுது வயது கூடுன ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன். அப்பொழுது கிரிஷ் பிறந்ததும் அவர் உடம்பு சரியில்லாமல் இறந்து போய்விட்டார். இதனால் அந்த குழந்தையை நான் பார்க்கும் சூழ்நிலைக்கு ஆளாகி விட்டேன். தற்போது என் மகள் வர முடியாது சூழலில் மாட்டிக் கொண்டார்.

அதனால் அவளை தொந்தரவு பண்ண முடியாது என்பதால் நானே கிரிசை வளர்த்துக் கொள்கிறேன் என்று ரோகிணியின் அம்மா சொல்லிவிடுகிறார். இதை கேட்டதும் முத்து மீனாவும் எதுவும் சொல்ல முடியாமல் பிறந்த நாள் பங்ஷனை முடித்துவிட்டு கிளம்பி விடுகிறார்கள். ஆனால் ஆசையாக பையனின் பிறந்தநாளை கொண்டாட நினைத்த ரோகிணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக முடிந்து விட்டது.

அது மட்டுமில்லாமல் கிருஸுக்கும் அம்மாவுடன் சேர்ந்து கேக் கட் பண்ண வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருந்தது. ஆனால் இது இரண்டுமே நடக்காமல் போய்விட்டது. இதனால் கோபப்பட்ட ரோகினி, அவருடைய அம்மாவிடம் இனி முத்து மீனா வந்தால் மூஞ்சி கொடுத்து பேசாதே. திட்டி விடு அப்பொழுது தான் அடிக்கடி இங்கு வராமல் இருப்பார்கள் என்று கோவமாக பேசிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் காரில் போய்க்கொண்டிருக்கும் போது கிரிசை பத்தி பேசி கவலைப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மீனா, நாம் கிரிசை தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார். வழக்கம்போல் மீனா என்ன சொன்னாலும் முத்துவும் ஓகே சொல்லிவிடுவார். அந்த வகையில் கூடிய விரைவில் க்ரிஷ், முத்து மீனாவின் அரவணைப்பில் வளர போகிறார். இதனால் ஒவ்வொரு நாளும் அவஸ்தை பட்டு தத்தளிக்க போகிறது ரோகிணியாக தான் இருக்கும். அந்த வகையில் இப்போதைக்கு ரோகிணி கிரிஷ் பற்றிய விஷயங்கள் வெளியே வர வாய்ப்பில்லை.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News